ஒன் இந்தியா செய்திகள்

எமர்ஜென்சி காலத்தில் கூட இதுபோன்ற சர்வாதிகார போக்கு நடைபெறவில்லை.. ரெய்டு குறித்து துரைமுருகன்!

Tuesday October 24th, 2017 07:34:20 AM
சென்னை: நடிகர் விஷால் அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு சர்வாதிகார போக்கு என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மெர்சல் படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் நடிகர் விஷால். மேலும் இணையதளத்தில் படம் பார்த்ததாக கூறிய எச்.ராஜாவையும் வெட்கமே இல்லையா என வெளுத்துவாங்கினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால். இந்நிலையில் அவரது

மோடியும், அமித்ஷாவும் பாசிச பாதையில் செல்கின்றனர் : வைகோ - வீடியோ

Tuesday October 24th, 2017 07:31:01 AM
மதுரை: கந்து வட்டி தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக வைகோ கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கந்து வட்டி தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக உள்ளதாதகாவும், இதில் சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய

பணமதிப்பு நீக்கம் : நவ.8ல் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் - கருப்பு தினமாக அனுசரிப்பு

Tuesday October 24th, 2017 07:17:37 AM
டெல்லி: பாஜக அரசுகொண்டு பணமதிப்பிழப்பு விவகாரத்தை கண்டித்து வரும் நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி திடீரென இரவு பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இனி ரூ.500, ரூ.1000

குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வியூகம்.. ராகுல் காந்தி - ஹர்திக் பட்டேல் ரகசிய சந்திப்பு

Tuesday October 24th, 2017 07:12:04 AM
அகமதாபாத் : குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பட்டேல் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேலை ராகுல் காந்தி ரகசியமாகச் சந்தித்து இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க மிகவும் செல்வாக்குப் பெற்ற மாநிலம் குஜராத். பிரதமர் மோடியும், பா.ஜ.க தலைவர் அமித்

ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுவது எப்போது?... அமைச்சர்களுடன் ஆலோசித்த எடப்பாடியார்

Tuesday October 24th, 2017 07:08:18 AM
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்த ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே அமைந்துள்ள ஜெயலலிதாவின் சமாதியை தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் வந்து பார்வையிட்டும், அஞ்சலி

100 மார்க் எடுத்த மாணவிகளை விமானத்தில் பறக்க வைத்த அரசு பள்ளி ஆசிரியை

Tuesday October 24th, 2017 07:00:36 AM
சென்னை: சென்னை அம்பத்தூர் பெண்கள் பள்ளி ஆசிரியை 100 மதிப்பெண்கள் எடுத்த இரு மாணவிகளை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அம்பத்தூரில் பெருந்தலைவர் காமராஜர் அரசுப் பெண்கள் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு சமூக அறிவியல் பாடம் எடுப்பவர் செல்வகுமார். இவர் 10ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்.

டெங்கு குறித்து ஆய்வு செய்ய சென்ற ஆட்சியர் விரட்டியடிப்பு.. பெண் மருத்துவர் மீது வழக்குப்பதிவு

Tuesday October 24th, 2017 07:00:17 AM
வேலூர்: டெங்கு குறித்து ஆய்வு செய்ய சென்ற ஆட்சியரை பெண் மருத்துவர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிரட்டி வருகிறது. இதனால் நாள்தோறும் உயிரிழப்புகள் நேரிடுகின்றன. இதனை தடுக்கும் வகையில் மாவட்டங்கள் தோறும் ஆட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள் என டெங்கு குறித்து ஆய்வு

தீக்குளித்து உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மிரட்டி ஒப்படைத்த போலீஸ்

Tuesday October 24th, 2017 06:46:53 AM
நெல்லை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து உயிரிழந்த 3 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கி முத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தீக்குளித்தார். சமூகவலைதளங்களில் வெளியான இந்தக் காட்சி பார்ப்போரின் நெஞ்சங்களை பதற வைத்தது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு... சீமான், அமீர் விடுதலை

Tuesday October 24th, 2017 06:44:52 AM
ராமேஸ்வரம்: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் இருந்து இயக்குனர் சீமான், அமீரை விடுவித்து ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தமிழ் திரையலகம் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இயக்குனர் சீமான், அமீர் மீது கியூ

கரூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களிடையே மோதல்- பதற்றம்

Tuesday October 24th, 2017 06:40:46 AM
கரூர்: கரூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். கரூரில் பாஜக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழிசையை கண்டித்து முழக்கமிட்டனர். அப்போது இரு கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கரூரில், அக்கட்சியின் செயற்குழு மற்றும்

தேசிய கீதம் பாடும் போது தீ குளிக்க முயற்சித்த பெண்கள்... அதிர்ந்த முதல்வர் - வீடியோ

Tuesday October 24th, 2017 06:33:30 AM
சிவகாசி: சிவகாசியில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் இருந்த விழா மேடை எதிரே மாமியார், மருமகள் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். முதல்வர் பேசி

நரிக்குறவர்களுடன் தீபாவளி சீன்... கந்துவட்டி குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத நெல்லை ஆட்சியர்

Tuesday October 24th, 2017 06:27:46 AM
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மக்களுக்கு பயன்படும் திட்டங்களை தீட்டி வருவதாகவும் எளிமையாக இருப்பதாகவும் பெயர் பெற்ற ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அவர் அலுவலகத்தில் வந்த கந்து வட்டி புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஆட்சியராக உள்ளவர் சந்தீப் நந்தூரி. இவர் மிகவும் எளிமையாக இருப்பதாகவும், மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை

ஊழல் அரசு அதிகாரிகள் செய்தி வெளியிட்டால் பத்திரிகையாளருக்கு 2 வருடம் சிறை: ராஜஸ்தானில் பகீர் சட்டம்

Tuesday October 24th, 2017 06:15:31 AM
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் சட்டசபையில் நேற்று குற்றவியல் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. கருத்து மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரான இந்தத் திருத்தங்களுக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அரசு ஊழியர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் மேல் அனுமதி இல்லாமல் வழக்குப்பதிவதோ, முன் விசாரணை நடத்துவதோ கூடாது என்கிற இந்த அவசர சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் ஆளும்

ரஜினி, கமல் வீட்டுக்கும் ரெய்டு போயிருக்கனும்... சொல்வது நடிகர் மயில்சாமி

Tuesday October 24th, 2017 06:13:19 AM
சென்னை: விஷால் அலுவலகத்தில் மட்டுமல்ல நடிகர்கள் ரஜினி, கமல் வீட்டுக்கும் கூட ரெய்டு போயிருக்க வேண்டும் என்று நடிகர் மயில்சாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூஸ் 7 சேனலில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் நடிகர் மயில்சாமி கூறியதாவது: விஷால் வீட்டுக்கு மட்டுமல்ல நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் வீட்டிலும் ரெய்டுக்கு போயிருக்க வேண்டும். ஜிஎஸ்டியை

நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானப்படை விமானங்கள்.. உ.பி.யில் அசத்தல்

Tuesday October 24th, 2017 06:10:35 AM
லக்னோ: இந்திய விமானப்படையை சேர்ந்த 16 விமானங்கள், லக்னோ-ஆக்ரா நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டு பயிற்சி எடுக்கப்பட்டன. இந்திய விமானப்படையை சேர்ந்த சி-130j வகை ஹெர்குலஸ் 35000 கிலோ வடிவிலான இந்த விமானங்கள் லக்னோ-ஆக்ரா நடுவேயான எக்ஸ்பிரஸ் வே நெடுஞ்சாலையில் தரையிறக்கப்படுகின்றன. போர் போன்ற சூழ்நிலைகளின்போது அவசரத்திற்கு நெடுஞ்சாலைகளை, ரன்-வேயாக பயன்படுத்த வேண்டிய நிலை வரும். அதற்காகவே

சசி போல ஜாலியாக ஷாப்பிங் போன சுகேஷ்.. உதவிய போலீசார் கைது - ஐவர் சஸ்பெண்ட்

Tuesday October 24th, 2017 05:48:51 AM
சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பெங்களூரில் ஷாப்பிங் செய்ய அனுமதித்ததாக 2 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இரட்டை இலை சின்னத்துக்கு அதிமுகவின் இரு அணிகளும் உரிமை கோரியதால் அச்சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்நிலையில்

வாங்கிய கடனுக்கு கிட்னியை விற்று பணம் கொடு... இது ஈரோடு கந்து வட்டி கொடுமை

Tuesday October 24th, 2017 05:42:51 AM
ஈரோடு : ஈரோடு அருகே கந்துவட்டி கடனை திருப்பி கொடுக்காத நெசவாளரின் சிறுநீரகத்தை விற்க நிர்பந்தப்படுத்தி அழைத்து சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவரின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தந்துள்ளார். ஈரோடு மாவட்ட சூரம்பட்டியை சேர்ந்த நெசவத் தொழிலாளர் ரவி என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ. 3 லட்சம் வரை கந்துவட்டிக் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் கடனை

கந்துவட்டியால் பறிபோன உயிர்கள். நடவடிக்கை எடுக்காத நெல்லை ஆட்சியரை கண்டித்து போராட்டம்

Tuesday October 24th, 2017 05:36:39 AM
நெல்லை: கந்துவட்டி கொடுமையால் 3 உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை தமிழ் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டனர். கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கி முத்து என்ற கூலி தொழிலாளி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் நேற்று தீக்குளித்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடி பொதுமக்கள் முன்னிலையில் அவர்கள் கதறி துடித்தது பார்ப்பவர்களை பதற வைத்தது.

பரபரப்பான சூழ்நிலையில், பாஜக மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கரூரில் தொடங்கியது!

Tuesday October 24th, 2017 05:27:50 AM
கரூர்: பாஜக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கரூரில் இன்று தொடங்கியது. தமிழக அரசை பாஜகதான் இயக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மெர்சல் திரைப்படம் தொடர்பாக கருத்து கூறியும் சர்ச்சையில் சிக்கியுள்ளது பாஜக. இந்த நிலையில், கரூரில், அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,

கந்துவட்டியால் பற்றி எரியும் மக்கள்.. கரடி கதை சொன்ன முதல்வர்!

Tuesday October 24th, 2017 05:23:21 AM
சிவகாசி: திருநெல்வேலியில் கந்து வட்டி கொடுமைக்கு ஒரு குடும்பமே தீக்குளித்த நிலையில் அதே நேரத்தில் சிவகாசியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கரடி கதை கூறினார். பேராசை பெரு நஷ்டம் என்பதை விளக்கும் வகையில் கரடி கதை ஒன்றை பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. "ஆற்றில் சில

பெத்த குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் அளவுக்கு தள்ளிய கந்து வட்டியின் கொடூரம்!

Tuesday October 24th, 2017 05:22:33 AM
சென்னை : நெல்லையில் தாய் தந்தையரே கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் பெற்ற பிள்ளைகளுக்கு உடலில் தீ வைத்து கொளுத்திவிட்டு தாங்களும் தீ வைத்துக் கொண்ட சம்பவம் தமிழக மக்களின் மனங்களை கனமாக்கியுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டி கொடுமைக்கு 6 முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மனமுடைந்த இசக்கி

நவம்பர் 8ல் தேசிய அளவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் மாபெரும் போராட்டம் ?

Tuesday October 24th, 2017 05:20:57 AM
டெல்லி : மத்திய அரசைக் கண்டித்து நவம்பர் 8ம் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்தது. அதனால் ஒரே

என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தீயில் கருகி உயிர்விட்ட இளம்பிஞ்சுகள்... #கந்துவட்டி

Tuesday October 24th, 2017 04:57:33 AM
சென்னை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில்ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் கந்துவட்டி கொடுமை குறித்து பலமுறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த இசக்கி முத்து என்பவர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் இசக்கி முத்துவின் மனைவி சுப்புலெட்சுமி, அவரது

கந்து வட்டியை தடுக்க \"ஆபரேஷன் குபேரா\".. தமிழகத்திலும் அமல்படுத்த சீமான் கோரிக்கை!

Tuesday October 24th, 2017 04:45:51 AM
சென்னை : கந்துவட்டி தடை சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும், 4 பேர் தீக்குளித்த சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மேல் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அச்சம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் ஒரு

கண்டுகொள்ளாத மத்திய அரசு.. டெல்லியில் 100வது நாள் போராட்டத்தை முடித்துக்கொண்ட தமிழக விவசாயிகள்

Tuesday October 24th, 2017 04:42:06 AM
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 100 நாட்களை கடந்த நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு, விவசாயிகள் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர்

கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி.. சட்டத்தை கையில் வச்சு என்ன சார் பண்ணப் போறோம்?

Tuesday October 24th, 2017 04:37:31 AM
சென்னை: வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவது பாவம் என்று கூறினாலும் அந்த வட்டி தொழிலை வைத்து கோடீஸ்வரர்களாக ஆனவர்கள் பலர் இருக்கிறார்கள். வட்டிக்கு வாங்கியவர்களோ பணத்தை கட்ட முடியாமல் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் தீக்குளித்தனர்.

உப்பு.. தண்ணீர்.. எச்.ராஜா என்ன சொல்கிறார் என்று தெரிகிறதா??

Tuesday October 24th, 2017 04:29:54 AM
சென்னை: உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் என நடிகர் விஷால் ஆபீஸ் ரெய்டு பற்றி பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார். இது தொடர்பாக கரூரில் செய்தியாளர்களிடம் எச். ராஜா கூறியதாவது: அரசாங்கத்தின் நிர்வாக அமைப்புகள் தங்களது கடமையை செய்கிறார்கள். அதற்கும் பாஜகவுக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. இதற்கும் ஆட்சிக்கும்

கந்து வட்டி கொடுமையால் தீக்குளிப்பு சம்பவத்திலும் பிரதமர் துதிபாடும் தமிழிசை

Tuesday October 24th, 2017 04:15:26 AM
சென்னை: கந்து வட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து 3 உயிரிழந்த நிலையிலும் சைக்கிள் கேப்பில் பிரதமர் குறித்து துதிபாடும் செயலை தமிழிசை சௌந்தரராஜன் நிறுத்தவில்லை. நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள , காசிதர்மம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் . மதுசரண்யா, அட்சய பரணிகா ஆகிய இரண்டு

ஜெ. சிகிச்சை படத்தை வெளியிடக் கூடாதுன்னு ஜெ.வே சொன்னாராமே.. புகழேந்தி அப்படித்தான் சொல்கிறார்!

Tuesday October 24th, 2017 04:05:55 AM
நாகை: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோவை ஏன் வெளியிடவில்லை என தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் புகைப்படத்தை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் வெளியிடப்படவில்லை. மத்திய அமைச்சர்கள், ஆளுநர், காங்கிரஸ்