மாலைமலர் செய்திகள்

கேபிள் டி.வி. முறைகேடுகளை சுட்டிக்காட்டினால் அவதூறு வழக்கு தொடர்வதா?: ராமதாஸ் அறிக்கை

Monday April 27th, 2015 06:23:00 AM Maalaimalar
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அரசு கேபிள் டி.வி. நிறுவன முறைகேடு குறித்து கடந்த 15–ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். நான் குறிப்பிட்டிருந்த உண்மைகள் சுட்டதால்

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

Monday April 27th, 2015 06:22:00 AM Maalaimalar
நேபாள நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் திபெத் நாட்டிலும் எதிரொலித்தது. இதன் காரணமாக அந்நாட்டில் இன்று வரை 20 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலநடுக்கத்தில் மேலும் 58 பேர் காயமடைந்துள்ளதாகவும், நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் திபெத் பிராந்திய பேரிடர் மீட்பு தலைமையகம் தெரிவித்துள்ளது.

செயற்கை கல்லீரல் உருவாக்கிய அமெரிக்க வாழ் இந்திய பெண் விஞ்ஞானிக்கு விருது

Monday April 27th, 2015 05:54:00 AM Maalaimalar
அமெரிக்க வாழ் இந்தியர் சங்கீதா பாட்டியா. இவர் ஒரு விஞ்ஞானி ஆவார். இவர் செயற்கையாக மனித கல்லீரல் உருவாக்கியுள்ளார். நோய்களை குணமாக்க எந்த வகையான மருந்து பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த செயற்கை கல்லீரல் மூலம் சோதனை நடத்த முடியும். இதற்காக அவருக்கு 2015–ம் ஆண்டுக்கான 'ஹெனீஷ் விருது'

சொத்து குவிப்பு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது - ஆனால் தீர்ப்பு வழங்கலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

Monday April 27th, 2015 05:54:00 AM Maalaimalar
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராகி வரும் பவானி சிங்கை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனினும் வழக்கை மீண்டும் விசாரிக்க தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை: பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு

Monday April 27th, 2015 05:48:00 AM Maalaimalar
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர்பக்துன்கவா மாகாணத்தில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. காற்று பலமாக வீசியதால் ஏராளமான வீடுகளின் கூரைகள் பறந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து தரைமட்டமாயின. நூற்றுக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் விளம்பர பலகைகள் கூண்டோடு சாய்ந்தன.

எவரெஸ்ட் சிகரத்திலிருந்து 19 வெளிநாட்டு மலையேற்ற வீரர்களின் பிரேதங்களை மீட்ட ராணுவம்: 61 பேர் உயிருடன் மீட்பு

Monday April 27th, 2015 05:47:00 AM Maalaimalar
நேபாளத்தையே நேற்று முன்தினம் புரட்டிப் போட்ட நிலநடுக்கத்தின் போது, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேறுவதற்காக வந்திருந்த வெளிநாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் பலர் பனிச்சரிவில் புதையுண்டனர். மேலும் பலர் பனிச்சரிவில் சிக்கி கடும் குளிரில் நடுங்கியபடி உயிருக்கு போராடி வந்தனர்.

எவரெஸ்ட் சிகரத்தில் 1000 மலையேறும் வீரர்கள் தவிப்பு: மீட்க அமெரிக்கா உதவி

Monday April 27th, 2015 05:46:00 AM Maalaimalar
எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் 1000 மலையேறும் வீரர்களை மீட்க அமெரிக்கா உதவி செய்கிறது. நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2500–க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். எவரெஸ்ட் சிகரத்தில் தற்போது மலையேறும் சீசன் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானில் மனைவி மீது ஆசிட் வீசியவருக்கு 46 ஆண்டு ஜெயில்

Monday April 27th, 2015 05:21:00 AM Maalaimalar
பாகிஸ்தானில் லாகூரை அடுத்த ஹெராகட் நகரை சேர்ந்தவர் மிர்ஷா ஆசிம் பெய்க். இவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இருந்தும் அவர் மீதான கோபம் மிர்ஷா அசீமுக்கு குறையவில்லை. ஆத்திரம் அடைந்த அவர் தனது முன்னாள் மனைவி மீது ‘ஆசிட்’ (திராவகம்) வீசினார். அதில் மனைவியின் முகம் மற்றும் உடல் வெந்தது. அவரது 2 கண்களும் பார்வையிழந்தது. அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மிர்ஷா அசீம் மீது

பிரதமரை சந்திக்க ஒத்துழைத்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி: டெல்லி புறப்படும் முன் விஜயகாந்த் பேட்டி

Monday April 27th, 2015 05:00:00 AM Maalaimalar
டெல்லி புறப்பட்டு செல்லும் முன்பு விமான நிலையத்தில் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:– இது அரசியல் பிரச்சினை அல்ல. மக்கள் பிரச்சினை. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களையும் ஒரே நாளில் சந்தித்து அழைத்ததும் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வடக்கை குலுக்கிய பூகம்பம்: பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு

Monday April 27th, 2015 05:00:00 AM Maalaimalar
நேபாளத்தைத் தொடர்ந்து இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களையும் நடுங்க செய்த நில நடுக்கத்தினால் நாடு முழுவதும் பலர் பலியாகியுள்ள நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 51 பேர் பலியாகியுள்ளனர். 173 பேர் காயமடைந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.

1330 திருக்குறளை ஒப்புவிக்கும் சிறுவர்கள் பாராளுமன்றத்திற்கு அழைத்து கவுரவிக்கப்படுவார்கள்: தருண்விஜய் எம்.பி. பேச்சு

Monday April 27th, 2015 04:46:00 AM Maalaimalar
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் வித்யாபாரதி அமைப்பின் சார்பில் கல்வியில் கலாச்சார மறுமலர்ச்சி பற்றிய தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. திருவள்ளுவரும் கலாசார மறுமலர்ச்சியும் என்ற நிகழ்வுக்கு வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி ‘பாரதிய குடும்பம் நெறிமுறைகள் 1000’

கருணாநிதி – விஜயகாந்த் சந்திப்பு: தி.மு.க.–தே.மு.தி.க. கூட்டணிக்கு அச்சாரமா?

Monday April 27th, 2015 04:46:00 AM Maalaimalar
காவிரி நதிகுறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உள்பட 5 முக்கிய பிரச்சனைகளை தீர்க்கக்கோரி பிரதமர் மோடியை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினர் இன்று சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்புக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று முக்கிய கட்சித் தலைவர்களை அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சென்று சந்தித்து அழைப்பு விடுத்தார்.

நேபாளத்திலிருந்து 1935 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர்: மத்திய அரசு

Monday April 27th, 2015 04:31:00 AM Maalaimalar
நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி தவித்த இந்தியர்களில் 1935 பேர் இதுவரை மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படையின் தொடர் முயற்சி காரணமாக, 12 விமானங்களில் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3200 ஆக உயர்ந்தது- நேற்றிரவும் நில அதிர்வு ஏற்பட்டதால் உறக்கமின்றி தவித்த மக்கள்

Monday April 27th, 2015 04:05:00 AM Maalaimalar
நேபாளத்தை கடந்த சனிக்கிழமையன்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 3200 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6500 பேர் படுகாயமடைந்துள்ளனர். அந்நாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக, அங்கு நேற்று பிற்பகலில் 6.7 ரிக்டர் அளவு கொண்ட நில நடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று இரவில் 5.4 ரிக்டர் அளவு கொண்ட

நீதிமன்றம் குட்டு வைத்தும் திருந்தாத பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர்: சூதாட்ட ஏஜெண்டை சந்தித்தாக ஐ.சி.சி. புகார்

Monday April 27th, 2015 03:34:00 AM Maalaimalar
கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பலர் தண்டிக்கப்பட்டும் சில பெருந்தலைகள் மட்டும் இன்னும் திருந்த மாட்டேன் என்கிறார்கள். சில வருடங்களாகவே கிரிக்கெட் விளையாட்டு வியாபாரமாக மாறிவிட்டது. திறமையான பல வீரர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டதுடன், விளையாடவே தெரியாத பல வில்லங்க வீரர்களுக்கு தொடர்ந்து விளையாட வாய்ப்பு

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஒரே ஆண்டில் ரூ.7848 கோடி கருப்பு பணம் கண்டுபிடிப்பு: மத்திய அரசு நடவடிக்கை

Monday April 27th, 2015 03:17:00 AM Maalaimalar
கருப்பு பணத்துக்கு எதிராக மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், 2013-2014-ம் நிதி ஆண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதி அமைச்சகம் புதிய அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அதில், நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு புலனாய்வு அமைப்புகள், மேற்கண்ட ஒரே நிதியாண்டில் உள்நாட்டிலும்,

சரக்கு, சேவை வரி மசோதா மீது பாராளுமன்றத்தில் இன்று விவாதம்

Monday April 27th, 2015 03:16:00 AM Maalaimalar
சரக்கு, சேவை வரிச் மசோதா மீது பாராளுமன்றத்தில் இன்று விவாதம் நடக்க உள்ளது. அப்போது, மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையை கொண்டு வர மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு விரும்புகிறது. இதற்கு வழிவகை

பிரிவினைவாத தலைவர் கிலானி தொடர்ந்து வீட்டுக்காவலில் சிறைவைப்பு

Monday April 27th, 2015 03:07:00 AM Maalaimalar
டெல்லியில் தங்கி இருந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரும், ஹூரியத் மாநாட்டு கட்சித்தலைவருமான சையது அலி ஷா கிலானி, கடந்த 16-ந்தேதி ஸ்ரீநகர் திரும்பினார். விமானநிலையத்தில் அவரை வரவேற்ற ஆதரவாளர்கள் பாகிஸ்தான் கொடிகளை ஏந்தியவாறு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மற்றொரு பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் கைது செய்யப்பட்டார்.

வானொலியில் பேசியபோது சாய்னா நேவால், சானியா மிர்சாவுக்கு மோடி பாராட்டு

Monday April 27th, 2015 02:55:00 AM Maalaimalar
பிரதமர் நரேந்திர மோடி, ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் வானொலியில் பேசிய போது, விளையாட்டு துறையில் சாதனை படைத்துவரும் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், சானியா மிர்சா ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார்.

கலிபோர்னியாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதியா? அமெரிக்க அதிகாரிகள் மறுப்பு

Monday April 27th, 2015 02:48:00 AM Maalaimalar
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக அந்நாட்டின் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததாகவும், இதைத்தொடர்ந்து முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் அமெரிக்க தொலைக்காட்சியான சி.என்.என். கடந்த சனிக்கிழமை செய்தி வெளியிட்டது.

கடத்தல் பொருட்களை தடுக்க கடற்கரை மணலில் அதிநவீன மோட்டார் சைக்கிளில் போலீசார் ரோந்து

Monday April 27th, 2015 06:42:00 AM Maalaimalar
இலங்கைக்கு ராமேசுவரம், தனுஷ்கோடி கடற்கரை, கடல் வழியை பல்வேறு பொருட்களை கடத்துவதற்காக பயன்படுத்துகின்றனர். இதை தடுக்கும் பணியில் கடலோர போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். ராமேசுவரம் அருகே உள்ள எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை மணல், கடற்கரை ஓர பகுதியில் கடலோர போலீசார் ரோந்து செல்வதற்காக கடற்கரை மணலிலும்

கோட்டா கொள்முதல் முறைக்கு கண்டனம்: பச்சைத் தேயிலையை ரோட்டில் கொட்டும் விவசாயிகள்

Monday April 27th, 2015 06:00:00 AM Maalaimalar
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இதனால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பச்சைத்தேயிலையை அரைக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

பிரியாணி விருந்தில் ஆட்டுக்கறி இல்லாததால் உருட்டு கட்டை அடி: சாலை மறியல்

Monday April 27th, 2015 05:50:00 AM Maalaimalar
வந்தவாசி தாலுகா மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(40). இவரது சகோதரர்கள் அண்ணாதுரை(38), குபேந்திரன்(36). இருவரும் சென்னையில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாதுரையும் குபேந்திரனும் தங்களது குழந்தைகளுக்கு குலதெய்வ கோவிலில் காதணி விழா நடத்த மருதாடு கிராமத்துக்கு வந்தனர். நேற்று அதே பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் காதணி விழா

இஸ்ரோவில் வேலை பார்ப்பதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.6.50 லட்சம் மோசடி: வாலிபர் மீது புகார்

Monday April 27th, 2015 05:47:00 AM Maalaimalar
நாகர்கோவில் சைமன் நகரை சேர்ந்தவர் அகஸ்டஸ். தொழிலதிபரான இவர் நெல்லை மாவட்டம் காவல் கிணறில் காற்றாலை விசிறிகள் பழுது நீக்கும் தொழிற்கூடம் வைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் இவரது அலுவலகத்திற்கு நாகர்கோவில் அருகே உள்ள கொட்டாரம் மகாராஜபுரத்தை

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கைவிடக்கோரி சென்னையில் விவசாயிகள் அடுத்த மாதம் உண்ணாவிரதம்

Monday April 27th, 2015 05:43:00 AM Maalaimalar
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். விவசாயிகளுக்கான மானியத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை கைவிட

ஸ்ரீவில்லிபுத்தூரில் டிராபிக் ராமசாமி முயற்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Monday April 27th, 2015 05:41:00 AM Maalaimalar
சமூக சேவகர் டிராபிக் ராமசாமி பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

தொடர்மழையால் பசுமையானது: முதுமலைக்கு திரும்பும் வனவிலங்குகள்

Monday April 27th, 2015 05:41:00 AM Maalaimalar
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கோடை வெயில் வறுத்தெடுத்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் வறண்டன. வனப்பகுதிகளில் உள்ள புற்கள் காய்ந்தன. பசுந்தீவனம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் முதுமலை புலிகள்

மணப்பாறையில் கோவில் திருவிழாவில் வாலிபர் படுகொலை: மறியல்–போலீசாருடன் மோதல்

Monday April 27th, 2015 05:37:00 AM Maalaimalar
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் சித்திரை பெருந்திருவிழா நடைபெறும். இந்த திருவிழா சித்திரை முதல் நாளில் குத்து விளக்கு பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பூச்சொரிதல், காப்பு கட்டுதல், பால்குடம், வேடபரி, பின்னர் காப்பு கலைதலுடன் திருவிழா நிறைவடையும். இந்த திருவிழா ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும். இந்நிலையில்

தூத்துக்குடியில் மேற்கு வங்க வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு

Monday April 27th, 2015 05:09:00 AM Maalaimalar
தூத்துக்குடி 4–ம் கேட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 10 வாலிபர்கள் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தூத்துக்குடி மீளவிட்டானில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தந்தை தற்கொலை

Monday April 27th, 2015 04:57:00 AM Maalaimalar
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் கோவில் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் திருப்பூரை சேர்ந்த கணேசன் (வயது 44) என்பவர் வந்தார். இவர் கட்டிட  தொழிலாளி ஆவார். கோபி வேட்டைக்காரன் கோவிலுக்கு வந்த அவர் மோட்டார் சைக்கிளை

தேர்வு முடிவு பயத்தில் பிளஸ்–2 மாணவி தீக்குளித்து தற்கொலை

Monday April 27th, 2015 04:49:00 AM Maalaimalar
ஜோலர்பேட்டை மங்கம்மா குளம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகள் சசிகலா (17). அங்குள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த இவர் நடந்து முடிந்த பிளஸ்–2 தேர்வை எழுதியுள்ளார். சில நாட்களாக சசிகலா யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்தததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது பெற்றோர் கேட்டபோது பிளஸ் தேர்வில்

ராமநாதபுரம் அருகே ரெயில் முன் பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை

Monday April 27th, 2015 04:48:00 AM Maalaimalar
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த குணசேகரன் மகன் ரகுவரன் (வயது 26), இவர் ராமநாதபுரம் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஒரு மாதமாக ரகுவரன் மருத்துவ விடுப்பு எடுத்து வீட்டில் இருந்து

ஊழலை ஒழிப்பதில் மோடி தீவிரமாக உள்ளார்: ஈஸ்வரன் பேட்டி

Monday April 27th, 2015 04:30:00 AM Maalaimalar
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கட்சி நிர்வாகிகளுடன் வரும் சட்டமன்ற தேர்தல் பற்றிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள ராசிபுரம் வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோழிப்பண்ணை தொழில் மிகவும் சிரமமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய முட்டை விலையில் கோழிப்பண்ணையாளர்கள்

காரை வழிமறித்து பெண் கொலை: சாராய வியாபாரியின் 2–வது மனைவியிடம் விசாரணை

Monday April 27th, 2015 04:27:00 AM Maalaimalar
காரைக்கால் திருமலை ராயன் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ராமு என்கிற ராதாகிருஷ்ணன். இவரது மனைவி வினோதா (38). இவர்களுக்கு 2 ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். சாராய வியாபாரியான ராமுவுக்கு ரூ.90 கோடி வரை சொத்து இருப்பதாக

ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை: குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்

Monday April 27th, 2015 04:26:00 AM Maalaimalar
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுந்தர பாண்டியபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது37) விவசாயி. இவரது மனைவி ஜெயகலா. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் முருகன் அடிக்கடி குடித்து விட்டு மனைவியை அடித்து சித்ரவதை செய்துள்ளார்.

கிரானைட் முறைகேடு குறித்து அறிக்கை தயாரிக்கும் பணியில் சகாயம் தீவிரம்

Monday April 27th, 2015 04:22:00 AM Maalaimalar
கிரானைட் முறைகேடு குறித்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்வதற்காக அறிக்கை தயாரிக்கும் பணியில் சகாயம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.

தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: கணவன்–மனைவி பலி

Monday April 27th, 2015 04:16:00 AM Maalaimalar
தேனி அருகே வருசநாடு போலீஸ் சரகம் தங்கம்மாள் புரத்தை சேர்ந்தவர் காளிமுத்து (வயது45) விவசாயி. இவரது மனைவி பச்சையம்மாள்(40). நேற்று இவர்கள் இருவரும் அய்யனார்கோவில் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு விழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்து மாலையில்

ஆம்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து: சுற்றுலா பயணிகள் 20 பேர் படுகாயம்

Monday April 27th, 2015 04:16:00 AM Maalaimalar
தர்மபுரி மாவட்டம் பொன்னாகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோர் தனியார் சொகுசு பஸ்சில் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு நேற்று இரவு சுற்றுலா செல்ல புறப்பட்டனர்.

பள்ளியில் மாணவர்கள் முன் தகராறு: தலைமையாசிரியர், ஆசிரியர் சஸ்பெண்டு

Monday April 27th, 2015 04:10:00 AM Maalaimalar
பேரணாம்பட்டு அடுத்த பத்தலபல்லியில் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு பேரணாம்பட்டை சேர்ந்த வள்ளுவன்(48) என்பவர் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் பத்தலபல்லி கிராமத்தை சேர்ந்த ராஜீவ்(30) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் 2 பேர் கைது

Monday April 27th, 2015 04:08:00 AM Maalaimalar
கோவை பெரிய நாயக்கன் பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசங்கர் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டில் கல்லார் பகுதியில்

சொத்து குவிப்பு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது - ஆனால் தீர்ப்பு வழங்கலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

Monday April 27th, 2015 05:54:00 AM Maalaimalar
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராகி வரும் பவானி சிங்கை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனினும் வழக்கை மீண்டும் விசாரிக்க தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவரெஸ்ட் சிகரத்திலிருந்து 19 வெளிநாட்டு மலையேற்ற வீரர்களின் பிரேதங்களை மீட்ட ராணுவம்: 61 பேர் உயிருடன் மீட்பு

Monday April 27th, 2015 05:47:00 AM Maalaimalar
நேபாளத்தையே நேற்று முன்தினம் புரட்டிப் போட்ட நிலநடுக்கத்தின் போது, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேறுவதற்காக வந்திருந்த வெளிநாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் பலர் பனிச்சரிவில் புதையுண்டனர். மேலும் பலர் பனிச்சரிவில் சிக்கி கடும் குளிரில் நடுங்கியபடி உயிருக்கு போராடி வந்தனர்.

செம்மரக்கடத்தல் வழக்கில் கைதான நடிகை பின்னணியில் அரசியல்வாதிகள்: காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

Monday April 27th, 2015 05:16:00 AM Maalaimalar
செம்மரக்கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் தேடப்பட்டு வந்த தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் நேற்று கைது செய்யப்பட்டார். நீத்து அகர்வால் ‘பிரேமபிராயணம்’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுக கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்

வடக்கை குலுக்கிய பூகம்பம்: பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு

Monday April 27th, 2015 05:00:00 AM Maalaimalar
நேபாளத்தைத் தொடர்ந்து இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களையும் நடுங்க செய்த நில நடுக்கத்தினால் நாடு முழுவதும் பலர் பலியாகியுள்ள நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 51 பேர் பலியாகியுள்ளனர். 173 பேர் காயமடைந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.

திருவனந்தபுரத்தில் மணமகன் விபத்தில் சிக்கியதால் ஆஸ்பத்திரியில் நடந்த திருமணம்

Monday April 27th, 2015 04:47:00 AM Maalaimalar
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்மனாபபுரத்தை சேர்ந்தவர் அப்துல்ரகுமான்(வயது 32). இவருக்கும் திருவனந்தபுரம் அருகே உள்ள பட்டம் பகுதியை சேர்ந்த ஹசீனா(26) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. நேற்று திருமணம்

நேபாளத்திலிருந்து 1935 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர்: மத்திய அரசு

Monday April 27th, 2015 04:31:00 AM Maalaimalar
நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி தவித்த இந்தியர்களில் 1935 பேர் இதுவரை மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படையின் தொடர் முயற்சி காரணமாக, 12 விமானங்களில் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளனர்.

8 கிலோ தலையுடன் உயிருக்கு போராடும் 7 வயது சிறுமி: அறுவை சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் பெற்றோர்

Monday April 27th, 2015 03:30:00 AM Maalaimalar
சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா சாலுஹூனிசே கிராமத்தை சேர்ந்தவர் ஈரண்ணா. கூலி தொழிலாளி. இவரது மனைவி காயத்ரியம்மா. இந்த தம்பதிக்கு ராதா (வயது 7) என்ற மகள் இருக்கிறாள். பிறக்கும்போது ராதா நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்தாள். இந்த நிலையில் ராதாவை மர்ம நோய் தாக்கியது. அதனால் அவளது தலை மற்றும் உடலில் பிறந்த 3

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஒரே ஆண்டில் ரூ.7848 கோடி கருப்பு பணம் கண்டுபிடிப்பு: மத்திய அரசு நடவடிக்கை

Monday April 27th, 2015 03:17:00 AM Maalaimalar
கருப்பு பணத்துக்கு எதிராக மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், 2013-2014-ம் நிதி ஆண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதி அமைச்சகம் புதிய அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அதில், நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு புலனாய்வு அமைப்புகள், மேற்கண்ட ஒரே நிதியாண்டில் உள்நாட்டிலும்,

சரக்கு, சேவை வரி மசோதா மீது பாராளுமன்றத்தில் இன்று விவாதம்

Monday April 27th, 2015 03:16:00 AM Maalaimalar
சரக்கு, சேவை வரிச் மசோதா மீது பாராளுமன்றத்தில் இன்று விவாதம் நடக்க உள்ளது. அப்போது, மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையை கொண்டு வர மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு விரும்புகிறது. இதற்கு வழிவகை

காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அமைக்காது: சீதாராம் யெச்சூரி பேட்டி

Monday April 27th, 2015 03:10:00 AM Maalaimalar
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு சீதாராம் யெச்சூரி முதல் முறையாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றார். அப்போது, கொல்கத்தா நகரில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பிரிவினைவாத தலைவர் கிலானி தொடர்ந்து வீட்டுக்காவலில் சிறைவைப்பு

Monday April 27th, 2015 03:07:00 AM Maalaimalar
டெல்லியில் தங்கி இருந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரும், ஹூரியத் மாநாட்டு கட்சித்தலைவருமான சையது அலி ஷா கிலானி, கடந்த 16-ந்தேதி ஸ்ரீநகர் திரும்பினார். விமானநிலையத்தில் அவரை வரவேற்ற ஆதரவாளர்கள் பாகிஸ்தான் கொடிகளை ஏந்தியவாறு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மற்றொரு பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் கைது செய்யப்பட்டார்.

பத்மநாபசாமி கோவில் குளத்தில் பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: போலீஸ் விசாரணை

Monday April 27th, 2015 02:55:00 AM Maalaimalar
திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் உள்ளது. இங்குள்ள ரகசிய அறைகளில் அரிய வகை பொற்குவியல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து உலக பிரசித்திப்பெற்ற தலங்களுள் ஒன்றாக பத்மநாபசாமி கோவில் கருதப்பட்டு வருகிறது. அரிய

வானொலியில் பேசியபோது சாய்னா நேவால், சானியா மிர்சாவுக்கு மோடி பாராட்டு

Monday April 27th, 2015 02:55:00 AM Maalaimalar
பிரதமர் நரேந்திர மோடி, ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் வானொலியில் பேசிய போது, விளையாட்டு துறையில் சாதனை படைத்துவரும் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், சானியா மிர்சா ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார்.

30 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து தவித்த காட்டுயானை: வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி மீட்டனர்

Monday April 27th, 2015 02:46:00 AM Maalaimalar
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குற்றியாம்சால் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை ஒன்று திடீர் என்று புகுந்தது. அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்த அந்த யானையை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அந்த யானையை பொதுமக்கள் வெடி வெடித்து விரட்டும்

உத்தரபிரதேசத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

Sunday April 26th, 2015 10:26:00 PM Maalaimalar
உத்தரபிரதேச மாநிலம் தத்தாலி என்ற கிரமத்தை சேர்ந்தவர் அஷ்ராம் (வயது 35). விவசாயி. நேற்று அந்த பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற அஷ்ராம் திடீரென அலுவலகம் முன்பு இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மழையால் பயிர்கள் சேதமடைந்ததால் மனம் உடைந்த நிலையில் இருந்து

செம்மர கட்டைகளை கடத்தியதாக சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

Sunday April 26th, 2015 09:11:00 PM Maalaimalar
செம்மர கட்டைகளை கடத்திய சென்னையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை-பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சித்தூர் மாவட்டம், நேன்ற குண்டா-பாகாலா சாலையில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த

நேபாள நிலநடுக்க நிவாரணத்திற்கு ஒரு மாத சம்பளத்தை கொடுக்கும் சிவசேனா எம்.பி.க்கள்

Sunday April 26th, 2015 04:13:00 PM Maalaimalar
நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் 2200-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்தியா அதிக அளவில் உதவி வருகிறது. இன்று 13 விமானப்படை விமானத்தை மீட்பு பணியில் ஈடுபட நேபாளத்திற்கு அனுப்பி உள்ளது. மேலும், மருத்துவ உதவிகள் செய்ய தயாராகி வருகிறது.

பீகாரில் மட்டும் நில நடுக்கத்துக்கு 50 பேர் பலி: நிதிஷ் குமார் அறிவிப்பு

Sunday April 26th, 2015 02:39:00 PM Maalaimalar
நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களையும் பதம் பார்த்த நில நடுக்கத்தில் இதுவரை நாடு முழுவதும் 62 பேர் பலியாகியுள்ள நிலையில் இவர்களில் சுமார் 50 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் 62 பேரின் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை 6 லட்சமாக உயர்வு: பிரதமர் மோடி உத்தரவு

Sunday April 26th, 2015 02:22:00 PM Maalaimalar
நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவையும் உலுக்கி எடுத்த நில நடுக்கத்தால் பலியான 62 பேரின் குடும்பத்தாருக்கு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, புயல், வெள்ளம், நில நடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த

நேபாளத்தில் மீட்புப் பணிகளுக்கு உதவ மேலும் 13 ராணுவ விமானங்கள்: இந்தியா அனுப்பியது

Sunday April 26th, 2015 01:38:00 PM Maalaimalar
நேபாளத்தில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்றும் மீட்புப் பணிகளில் இந்திய விமானப் படை மற்றும் ராணுவ விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், இன்றும் ஏற்பட்ட 6.7 ரிக்டர் அளவிலான நில நடுக்கம்

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

Monday April 27th, 2015 06:22:00 AM Maalaimalar
நேபாள நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் திபெத் நாட்டிலும் எதிரொலித்தது. இதன் காரணமாக அந்நாட்டில் இன்று வரை 20 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலநடுக்கத்தில் மேலும் 58 பேர் காயமடைந்துள்ளதாகவும், நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் திபெத் பிராந்திய பேரிடர் மீட்பு தலைமையகம் தெரிவித்துள்ளது.

செயற்கை கல்லீரல் உருவாக்கிய அமெரிக்க வாழ் இந்திய பெண் விஞ்ஞானிக்கு விருது

Monday April 27th, 2015 05:54:00 AM Maalaimalar
அமெரிக்க வாழ் இந்தியர் சங்கீதா பாட்டியா. இவர் ஒரு விஞ்ஞானி ஆவார். இவர் செயற்கையாக மனித கல்லீரல் உருவாக்கியுள்ளார். நோய்களை குணமாக்க எந்த வகையான மருந்து பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த செயற்கை கல்லீரல் மூலம் சோதனை நடத்த முடியும். இதற்காக அவருக்கு 2015–ம் ஆண்டுக்கான 'ஹெனீஷ் விருது'

பாகிஸ்தானில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை: பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு

Monday April 27th, 2015 05:48:00 AM Maalaimalar
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர்பக்துன்கவா மாகாணத்தில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. காற்று பலமாக வீசியதால் ஏராளமான வீடுகளின் கூரைகள் பறந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து தரைமட்டமாயின. நூற்றுக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் விளம்பர பலகைகள் கூண்டோடு சாய்ந்தன.

எவரெஸ்ட் சிகரத்தில் 1000 மலையேறும் வீரர்கள் தவிப்பு: மீட்க அமெரிக்கா உதவி

Monday April 27th, 2015 05:46:00 AM Maalaimalar
எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் 1000 மலையேறும் வீரர்களை மீட்க அமெரிக்கா உதவி செய்கிறது. நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2500–க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். எவரெஸ்ட் சிகரத்தில் தற்போது மலையேறும் சீசன் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானில் மனைவி மீது ஆசிட் வீசியவருக்கு 46 ஆண்டு ஜெயில்

Monday April 27th, 2015 05:21:00 AM Maalaimalar
பாகிஸ்தானில் லாகூரை அடுத்த ஹெராகட் நகரை சேர்ந்தவர் மிர்ஷா ஆசிம் பெய்க். இவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இருந்தும் அவர் மீதான கோபம் மிர்ஷா அசீமுக்கு குறையவில்லை. ஆத்திரம் அடைந்த அவர் தனது முன்னாள் மனைவி மீது ‘ஆசிட்’ (திராவகம்) வீசினார். அதில் மனைவியின் முகம் மற்றும் உடல் வெந்தது. அவரது 2 கண்களும் பார்வையிழந்தது. அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மிர்ஷா அசீம் மீது

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3200 ஆக உயர்ந்தது- நேற்றிரவும் நில அதிர்வு ஏற்பட்டதால் உறக்கமின்றி தவித்த மக்கள்

Monday April 27th, 2015 04:05:00 AM Maalaimalar
நேபாளத்தை கடந்த சனிக்கிழமையன்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 3200 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6500 பேர் படுகாயமடைந்துள்ளனர். அந்நாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக, அங்கு நேற்று பிற்பகலில் 6.7 ரிக்டர் அளவு கொண்ட நில நடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று இரவில் 5.4 ரிக்டர் அளவு கொண்ட

உலகின் முதல் செல்பி அருங்காட்சியகம் மணிலாவில் உருவாக்கம்

Monday April 27th, 2015 03:29:00 AM Maalaimalar
செல்போன் கேமராக்களில் தங்களை தாங்களே படம் பிடித்துக்கொள்வது (செல்பி) இன்று ஒரு கலையாகவே மாறிவிட்டது. குறிப்பாக செல்பி படம் எடுப்பதில் பிலிப்பைன்ஸ் நாட்டினர் மிகுந்த மோகம் கொண்டு உள்ளனர். இதுபோல் செல்பி படம் எடுத்துக்கொள்பவர்களுக்காக தலைநகர்

கலிபோர்னியாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதியா? அமெரிக்க அதிகாரிகள் மறுப்பு

Monday April 27th, 2015 02:48:00 AM Maalaimalar
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக அந்நாட்டின் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததாகவும், இதைத்தொடர்ந்து முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் அமெரிக்க தொலைக்காட்சியான சி.என்.என். கடந்த சனிக்கிழமை செய்தி வெளியிட்டது.

இலங்கை தமிழர் உள்பட 10 பேரின் மரண தண்டனையை நிறுத்திவைக்க இந்தோனேசியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்

Monday April 27th, 2015 02:26:00 AM Maalaimalar
போதைபொருள் கடத்தல் வழக்கில் இலங்கை தமிழர் உள்பட 10 பேருக்கும் மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், இந்தோனேஷியா அரசை கேட்டுக்கொண்டார். இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. போதைப்பொருள் கடத்தியதாக

சீனாவில் விஷவாயு தாக்கி 9 தொழிலாளர்கள் பலி

Monday April 27th, 2015 12:08:00 AM Maalaimalar
சீனாவின் யுனான் மாகாணம் குன்மிங் நகரம் அருகே லியான்மென்க் கிராமம் உள்ளது. இங்குள்ள சுரங்கத்தில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களை விஷவாயு தாக்கியது. அப்போது அங்கு

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2500 ஆக உயர்ந்தது

Monday April 27th, 2015 12:00:00 AM Maalaimalar
நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 2500 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5900 பேர் படுகாயமடைந்துள்ளனர். 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கத்தை சந்தித்த நேபாளத்தில் நேற்று மட்டும் தொடர்ந்து 16 முறை நிலநடுக்கம்

இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை அறிக்கை தாக்கல்

Sunday April 26th, 2015 10:00:00 PM Maalaimalar
இலங்கை இறுதிகட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்களின் உறவினர்கள் இலங்கை அரசை வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய ராஜபக்சே அரசால், 3 நபர் விசாரணை குழு ஒன்று

தொடர்ந்து சாம்பலை கக்கும் சிலி கால்புகோ எரிமலை: உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து

Sunday April 26th, 2015 09:22:00 PM Maalaimalar
சிலி நாட்டில் உள்ள கால்புகோ எரிமலை தொடர்ந்து சாம்பலை கக்கிவருவதால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்றும் எரிமலை தொடர்ந்து நிலையற்ற தன்மையுடன் சாம்பலை வெளியிட்டு வருகிறது. சாம்பல் மேகங்கள் 2000 கிலோ மீட்டர் தூரம்

பாகிஸ்தானில் புயல் மழைக்கு 26 பேர் பலி, 180 பேருக்கு மேல் படுகாயம்

Sunday April 26th, 2015 08:52:00 PM Maalaimalar
பாகிஸ்தானில் புயல் மற்றும் கடும் மழைக்கு இதுவரை 26 பேர் பலியாகியுள்ளதாகவும், 180 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வடமேற்கு நகரமான பெஷாவர் பகுதியில் நேற்று வீசிய புயல் காற்று மற்றும் மழையால் கடுமையான வெள்ள பெறுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும்

விமான கட்டணம் பாதிக்கு மேல் குறைப்பு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஏர் இந்தியா நடவடிக்கை

Sunday April 26th, 2015 07:58:00 PM Maalaimalar
நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஏர் இந்தியா விமான கட்டணம் பாதிக்கு மேல் குறைத்துள்ளது. தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி காத்மாண்டுவில் இருந்து டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி

ஒபாமாவின் மின்னஞ்சல்களை படித்த ரஷ்ய ஹேக்கர்கள்: அதிகாரிகள் அதிர்ச்சி

Sunday April 26th, 2015 07:00:00 PM Maalaimalar
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மின் அஞ்சல்களை ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் படித்ததாக தெரியவந்துள்ளது. மிகவும் அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட நாட்டின் அதிபர் எழுதிய மின் அஞ்சல்கள் ஹேக்கர்களால் படிக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது. அதிபர்

காத்மாண்டுவில் கடும் மழை: மீட்புப் பணிகள் பாதிப்பு- விமான நிலையம் மூடப்பட்டது

Sunday April 26th, 2015 03:18:00 PM Maalaimalar
நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் இதுவரை 2200 பேருக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடும் சேதம் ஏற்பட்டுள்ள நேபாளத்திற்கு எல்லா வகையிலும் இந்தியா உதவி செய்யும் என்று பிரதமர் அறிவித்திருந்தார். இதன்பயனாக இன்று இந்தியா 13 ராணுவ விமானத்தை அங்கு அனுப்பியுள்ளது. முதல் நிலநடுக்கத்திற்குப்பின் இன்று மீண்டும்

அபாரப் பாசத்தால் மகனின் முகத்தை தாடையில் பச்சை குத்திக் கொண்டு திரியும் இளம்வயது அப்பா

Sunday April 26th, 2015 03:17:00 PM Maalaimalar
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஹவ்ஸ்டன் நகரைச் சேர்ந்தவர் கிரிஸ்டியன் ஸெக்ரிஸ்ட். 20 வயது வாலிபரான இவருக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் மீது தான் வைத்திருக்கும் மட்டில்லாத பாசத்தை உலகத்துக்கு உணர்த்தும் விதமாக, கடுமையான வலியையும்

அலுவலகத்தில் பிறந்த குழந்தையை கவரில் சுற்றி, டிராயரில் அடைத்துவைத்துக் கொன்ற கொடூரத் தாய் கைது

Sunday April 26th, 2015 03:07:00 PM Maalaimalar
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த கிம்பர்லி பப்பாஸ்(25) என்பவருக்கு வேலை செய்து கொண்டிருந்த அலுவலகப் பணி நேரத்தில் கடுமையான பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து, அலுவலகத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற அந்தப் பெண்

நேபாள நிலநடுக்கத்தில் 2250 பலி, 5500 பேர் படுகாயம்: 66 லட்சம் மக்கள் பாதிப்பு- ஐ.நா. மதிப்பீடு

Sunday April 26th, 2015 12:14:00 PM Maalaimalar
நேபாளத்தில் நேற்றைய நில நடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 250 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த கோரப் பேரழிவினால் 5500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 66 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக, காத்மாண்டுவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நேபாளத்துக்கான ஐக்கிய நாடுகள்