தினமலர் செய்திகள்

 

பயங்கரவாதத்தை பரப்பும் பாக்.,கிற்கு மோடி - டிரம்ப் எச்சரிக்கை...!

Tuesday June 27th, 2017 04:07:00 PM
வாஷிங்டன்: 'பயங்கரவாதிகள், பாகிஸ்தானை, புகலிடமாக பயன்படுத்துவதை, அந்நாடு அனுமதிக்க கூடாது. ஐ.எஸ்., லஷ்கர் - இ - தெய்பா, ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் நேற்று, கூட்டாக பாகிஸ்தானை வலியுறுத்தினர்.அமெரிக்காவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை நேற்று முன்தினம் இரவு, சந்தித்து பேசினார்.அதிபரின் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின்போது, மும்பை மற்றும் ...

நல திட்டங்களுக்கு 'ஆதார்' கட்டாயம்; தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Tuesday June 27th, 2017 04:14:00 PM
புதுடில்லி: மதிய உணவு திட்டம் உட்பட, பல்வேறு சமூகநலத் திட்டங்களின் பலனை பெறுவதற்கு, 'ஆதார்' எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கும், மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு, கல்வி உதவித்தொகை உட்பட, மத்திய அரசின் பல்வேறு சமூகநலத் திட்டப் பலன்களை பெறுவதற்கு, வரும், 30க்குள், ஆதார் எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கும் வகையில், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள், நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், நவின் சின்ஹா ...

ஜாதி அடிப்படையில் விவாதம் ஏன்? ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் வருத்தம்

Tuesday June 27th, 2017 04:21:00 PM
ஜனாதிபதி தேர்தலில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார், ''ஜனாதிபதி வேட்பாளரை, அவரது தகுதி அடிப்படையில் பார்க்காமல், சமூகம் அடிப்படையில் விவாதிப்பது கவலை அளிக்கிறது,'' என, தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தல், ஜூலை 17ல் நடக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில், பீஹார் முன்னாள் கவர்னரும், தலித் சமூகத்தை சேர்ந்தவருமான, ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். இதையடுத்து, பீஹாரை சேர்ந்த மற்றொரு தலித் தலைவரும், லோக்சபா முன்னாள் சபாநாயகருமான மீரா குமாரை, ஐ.மு., ...

தனியார் பால் பவுடரில் 'காஸ்டிக் சோடா' கலப்படம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் புகார்

Tuesday June 27th, 2017 04:53:00 PM
சென்னை: ''தனியார் பால் பவுடரில், 'காஸ்டிக் சோடா' கலந்திருப்பது, பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. பாலில் கலப்படம் உள்ளதாக கூறியதால், எனக்கு மிரட்டல்கள் வருகின்றன,'' என, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.அவர் அளித்த பேட்டி: 'நெஸ்ட்லே டுடே, ரிலையன்ஸ்' நிறுவனங்களின் பால் பவுடரில், 'காஸ்டிக் சோடா, பிளிச்சிங் பவுடர்' கலந்திருப்பதாக, சோதனை முடிவு வந்துள்ளது. பத்திரிகை குழுமம் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில், சோதனை செய்த போது, இந்த முடிவு வந்துள்ளது.அமிலம் அதிகமாகி, கெட்டுப்போன பாலில், அமிலத் தன்மையை ...

தொழில் முதலீடு: தமிழகம் பின்னடைவு

Tuesday June 27th, 2017 05:00:00 PM
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் பின்தங்கியது. 2016ல், தொழில் துவங்க அனுமதி பெற்ற, 20 நிறுவனங்கள் வாயிலாக, 4,793 கோடி ரூபாய் முதலீட்டை மட்டுமே ஈர்த்துள்ளது.ஒரு மாநிலத்தில், ஐந்து கோடி ரூபாய்க்கு மேலான முதலீட்டில், தொழில் துவங்க விரும்பும் நிறுவனம், மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கு, ஐ.இ.எம்., என, பெயர். மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், மாநில அரசை அணுகி, தொழில் துவங்கலாம். இவ்வாறு, ஐ.இ.எம்., கிடைக்கப் பெற்ற நிறுவனங்கள், குறிப்பிட்ட மாநிலத்தில் தொழில் துவங்காமல், வேறு மாநிலத்திற்கு போகும் வாய்ப்பும் ...

எம்.பி.,க்கள் எதிர்ப்பு கொடி; சசிகலா குடும்பம் கடும் அதிர்ச்சி

Tuesday June 27th, 2017 05:18:00 PM
ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, 'சசிகலா மற்றும் முதல்வர் ஒப்புதலுடன், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது' என, கூறியிருந்தார். அதற்கு, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அரி, அருண்மொழிதேவன், எம்.எல்.ஏ., முருகுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருத்தணியில் பேட்டி அளித்த அரி, 'கட்சியும், ஆட்சியும், முதல்வர் பழனி சாமி தலைமையில், சிறப்பாக நடந்து வருகிறது. எனவே, தேவையில்லாமல் சசிகலா குடும்பம், கட்சியில் தலையிடக் கூடாது. பொதுச்செயலர் தேர்வே செல்லுமா என்ற ...

அரசு பள்ளிகளின் செயல்பாடு குறித்து உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Tuesday June 27th, 2017 05:32:00 PM
சென்னை: 'பள்ளிக்கு சரியாக வராமல், சொந்த தொழிலில் ஈடுபடும் பெரும்பாலான ஆசிரியர்களால், மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது; அந்த அரசு பள்ளி மாணவர்களை, ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் காணப்படும் பிரச்னைகள் தொடர்பாக, தமிழக அரசிடம், 20 கேள்விகளை சரமாரியாக எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும், உத்தரவிட்டுள்ளது.தஞ்சை மாவட்டம், பந்தநல்லுாரில், பசுபதி நடுநிலை பள்ளி உள்ளது; இது, அரசு உதவி பெறும் பள்ளி. இங்கு ஆங்கில வழி வகுப்பை துவங்க, பள்ளி ...

ஆளாளுக்கு அறிக்கை விடுவதால் அ.தி.மு.க.,வினர் பெரும் குழப்பம்

Tuesday June 27th, 2017 05:41:00 PM
அ.தி.மு.க.,வில், பல தலைமை உருவாகி உள்ளதால், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கட்டுப்பாடின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடத் துவங்கி உள்ளனர். அதனால், கட்சியினர் மத்தியில் குழப்பம் அதிகரித்து வருகிறது.அ.தி.மு.க.,வில், பன்னீர் அணி, பழனிசாமி அணி, தினகரன் அணி என, மூன்று அணிகள் உருவாகி உள்ளன. சசி பற்றி மவுனம்முதல்வர் பழனிசாமி அணியினர், தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். ஆனால், சசிகலா குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். தினகரன் அணியினரோ, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். 'ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு' என, ...

அரசு பள்ளி எதிரே 'டாஸ்மாக்' கடை; மூட கோரி மாணவியர் போராட்டம்

Tuesday June 27th, 2017 06:10:00 PM
கடும் எதிர்ப்பையும் மீறி, கோவிலம்பாக்கம் அரசு பள்ளி எதிரே திறந்த, 'டாஸ்மாக்' கடையை மூடக்கோரி, மாணவியர் நடத்திய முற்றுகை போராட்டத்தால், கடையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.சென்னை, கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு கொளத்துார் பகுதியில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு எதிரே, 23ம் தேதி, டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. கடையை நடத்த, தி.மு.க.,வைச் சேர்ந்த நபர் இடம் வழங்கி உள்ளார். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நபர், 'பார்' நடத்துகிறார். இரண்டு பேரின் கூட்டு முயற்சியில், அதிகாரிகள் கடையை ...

இந்தியாவின் நிதியாண்டு கணக்கு மாறுகிறது; 150 ஆண்டு நடைமுறை முடிவு

Tuesday June 27th, 2017 07:15:00 PM
புதுடில்லி: இந்தியாவின் நிதியாண்டு கணக்கை, ஜன., - டிச., ஆக மாற்றுவதற்கு, மத்திய அரசுக்கு, உயர்மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது.உயர்மட்டக் குழு:இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், பிரிட்டன் வழக்கப்படி, 1867ல், ஏப்., - மார்ச் நிதியாண்டை அறிமுகப்படுத்தினர். இந்நிலையில், 'நிடி ஆயோக்' அமைப்பு, 'நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, குறிப்பாக, வேளாண் துறை சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, நிதியாண்டை, ஜன., - டிச., ஆக மாற்றுவது நல்லது' என, தெரிவித்தது. இது குறித்து ஆராய, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா ...

'அமைச்சர் ராஜு என் ஹீரோ': நடிகை கஸ்தூரி கிண்டல்

Tuesday June 27th, 2017 08:30:00 PM
'தெர்மாகோல் புகழ் அமைச்சரே, என் விருப்பமான சூப்பர் ஹீரோ' என, நடிகை கஸ்துாரி குறிப்பிட்டுள்ளார்.ரஜினி, பிரபு, விஜய்காந்த் என, 1990ல், பிசியாக வலம் வந்தவர் நடிகை கஸ்துாரி. திருமணமாகி வெளிநாடு சென்றவர், மீண்டும் இந்தியா திரும்பி வந்து, சில படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாய்ப்பு குறைவாக இருப்பதால், 'டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், எப்போதும் 'பிசி'யாக இருக்கிறார்.சமீபகாலமாக, அரசியல் உள்ளிட்ட சமூக பிரச்னைகளில் கருத்துக்கூறி, சிக்கலில் மாட்டுவதோடு, மற்றவர்களையும் மாட்டி விடுகிறார். ரஜினியின் அரசியல் பிரவேசம் ...

இந்தியாவுக்கு 22 ட்ரோன்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

Tuesday June 27th, 2017 09:20:00 PM
வாஷிங்டன்: இந்தியாவுக்கு 22 கார்டியன் ட்ரோன் வகை ஆளில்லா உளவு விமானங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.ஒப்பந்தம்:பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன. இதில், இந்திய கடலோர மற்றும் நிலப்பரப்பு எல்லைகளைக் கண்காணிக்க, 22 கார்டியன் ட்ரோன் வகை ஆளில்லா உளவு விமானங்களை வாங்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து இருபத்து எட்டாயிரம் கோடி ரூபாய்(2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்பது ...

‛வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் சிறப்பு': மோடி

Tuesday June 27th, 2017 10:07:00 PM
தி ஹேக்: வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு என நெதர்லாந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.3 நாடுகள் பயணத்தின் ஒருபகுதியாக நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு நெதர்லாந்து வாழ் இந்திய மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.நல்லாட்சி:இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இங்குள்ள பலர் ஓ.சி.ஐ., கார்டு இல்லாமல் உள்ளனர். 10 சதவீத பேர் மட்டுமே வைத்துள்ளனர். இந்தியாவில் இருந்து இங்கு புலம்பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் ஓ.சி.ஐ., ...


பணம் காய்க்கும் மரமான பாலகங்கள்... ஆக்கிரமிப்பு சிட்டி: ஆவின் 'அட்ராசிட்டி' பூங்காவிலும் ஆளுங்கட்சியினர் அத்துமீறல்!

Wednesday June 28th, 2017 12:00:00 AM
ரோடு, நடைபாதை, குளக்கரை வரிசையில், பொது மக்கள் பயன்பாட்டுக்குரிய பூங்காவை ஆக்கிரமித்தும், 'ஆவின்' பெட்டி வைப்பதற்கான முயற்சி நடந்துள்ளது; தொடரும் இந்த ஆக்கிரமிப்பு கலாச்சாரம், கோவை மக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி வருகிறது.கோவை நகரில், கடந்த சில ...

சென்டாக் அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள்... ரெய்டு முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றனர்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
புதுச்சேரி : சென்டாக் அலுவலகத்தில் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு முதுநிலை மருத்துவ இடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு முறைகேடாக மாற்றியது தொடர்பாக, கவர்னர் கிரண்பேடி எழுப்பிய ...

மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் 6,768 பேர்தப்புக்கணக்கு:தினமும் பணிக்கு வருவோர் 3,000 பேர்; மீதம் எங்கே

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மதுரை;மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் நடக்கும் துப்புரவு பணிகளை ஒருங்கிணைப்பு செய்வதும், அதில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள் என்பதை கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தெரிந்து கொள்வது தொடர்ந்து சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது.சுகாதாரப் பிரிவின் மூலம் துப்புரவு பணிகளை செய்வதற்கு ...

சிகிச்சைக்காக நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும்அவலம்:ராமேஸ்வரம் மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
ராமேஸ்வரம்;ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால், நோயாளிகள் சிகிச்சைக்கு பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் உள்ளது. ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் வசிக்கும் மக்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற முடியும். இம்மருத்துவமனைக்கு தினமும் 600 ...

கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் வசூல்:அதிருப்தியில் சுற்றுலா பயணிகள்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கொடைக்கானல்; கொடைக்கானலில் பஸ்ஸ்டாண்ட், கார் பார்க்கிங், கட்டண கழிப்பறை, நகராட்சி சுற்றுலா இடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. கொடைக்கானலுக்கு பிறமாநிலம், வெளிநாட்டவர் என எல்லா பகுதியில் இருந்தும் தினமும் பலஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளிடம் ...

நெருக்கடியில் காரைக்குடி நகராட்சி பள்ளி திணறல்:கோப்புகளை கிடப்பில் போட்ட வருவாய்த்துறை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
காரைக்குடி;காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட ராமனாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால், தமிழ், ஆங்கில வழி பிரிவு மாணவர்கள் ஒரே கட்டடத்துக்குள் நெருக்கடியில் படிக்கும் நிலை தொடர்கிறது.காரைக்குடி டி.டி.நகர் சர்ச் 7-வது வீதியில் நகராட்சிக்கு உட்பட்ட ...

விபத்து ஏற்படுத்தும் வாகன முகப்புவிளக்குகளைதடை செய்ய வேண்டும்:நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
வத்திராயிருப்பு;அதிகமான ஒளி உமிழும் முகப்பு விளக்குகளை பலரும் வாகனங்களில் பொருத்துவது அதிகரித்து வருவதால் இரவில் எதிரே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போக்குவரத்து துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் ...

அனுமதியின்றி கண்மாயில் மணல் திருட்டு:டி.ரங்கநாதபுரம் மக்கள் எதிர்ப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
தேவாரம்;தேவாரம் அருகே புறம்போக்கு வண்டிப்பாதையில் மணல் அள்ளியதற்கு, டி.ரங்கநாதபுரம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அனுமதி ரத்து செய்யப்பட்டது. தேவாரம் சின்னதேவி கண்மாயின் கீழ்பகுதியில் விவசாயிகள் பயன்பாட்டிற்காக, 60 அடி அகலத்தில் வண்டி புறம்போக்கு பாதை உள்ளது. தேவாரம் சுத்தகங்கை ...


ஆரோவில்லில் அமித் ஷா தியானம்

Tuesday June 27th, 2017 05:54:00 PM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு, இரண்டு நாள் பயணமாக வந்திருந்த, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா, சர்வதேச நகரான ஆரோவில்லில், நேற்று தியானம் செய்தார்.பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நுாற்றாண்டு விழாவை முன்னிட்டும், பா.ஜ.,வை பலப்படுத்தும் விதமாகவும், அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, நாடு முழுவதும் ...

சபரிமலையில் ஆறாட்டு விழா இன்று துவக்கம்

Tuesday June 27th, 2017 06:20:00 PM
சபரிமலை: சபரிமலையில், ஆறாட்டு திருவிழா இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது; காலை, 9:15 மணிக்கு, தங்க கொடி மரத்தில், தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றுவார்.இன்று முதல், ஜூலை 6 வரை, இரவு, 9:30 மணிக்கு ஸ்ரீபூதபலி நடைபெறும். 2ம் திருவிழா முதல், 9ம் திருவிழா வரை பகல், 12:30 மணிக்கு உற்சவபலி நடைபெறும்.ஜூலை ...

ரயில் கட்டணம் உயர்கிறது?

Tuesday June 27th, 2017 06:37:00 PM
புதுடில்லி: ரயில் கட்டணத்தை உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ரயில் கட்டணம் தொடர்பாக,பிரதமர் நரேந்திர மோடிதலைமையில், சமீபத்தில், மத்திய கட்டமைப்புத் துறைகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், ரயில்வேயின் தற்போதைய ...

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.17,425 கோடி அபராதம்

Tuesday June 27th, 2017 06:43:00 PM
புதுடில்லி: இணையதளத்தில் பொருட் களின் விற்பனை சேவைகள் குறித்து தேடும்போது, தனக்கு சாதகமான நிறுவனங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் வகையில் மோசடி செய்ததாக, இணைய தேடு தளமான, 'கூகுள்' நிறுவனத்துக்கு, ஐரோப்பிய யூனியன், 17 ஆயிரத்து, 425 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது. இணைய தேடு தளமான கூகுளில், ...

இந்தியாவின் நிதியாண்டு கணக்கு மாறுகிறது; 150 ஆண்டு நடைமுறை முடிவு

Tuesday June 27th, 2017 07:15:00 PM
புதுடில்லி: இந்தியாவின் நிதியாண்டு கணக்கை, ஜன., - டிச., ஆக மாற்றுவதற்கு, மத்திய அரசுக்கு, உயர்மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது.உயர்மட்டக் குழு:இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், பிரிட்டன் வழக்கப்படி, 1867ல், ஏப்., - மார்ச் நிதியாண்டை அறிமுகப்படுத்தினர். ...

பி.யு.சி., துணை தேர்வு இன்று துவக்கம் : 2.51 லட்சம் பேர் பங்கேற்பு

Tuesday June 27th, 2017 07:16:00 PM
பெங்களூரு: இன்று துவங்கும், இரண்டாம் ஆண்டு பி.யு.சி., துணை தேர்வில், இரண்டு லட்சத்து, 51 ஆயிரத்து, 636 பேர் எழுதுகின்றனர்.பி.யு.சி., இயக்குனர் சி.ஷிகா வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று துவங்கும், இரண்டாம் ஆண்டு பி.யு.சி., துணை தேர்வு, ஜூலை, 8ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை, 10:15 மணிக்கு துவங்கி, பகல், 1:30 மணி வரையிலும்; ...

ஜி.பி.எஸ்., மொபைல் போன் மூலம் கால்நடை டாக்டர்கள் கண்காணிப்பு

Tuesday June 27th, 2017 07:19:00 PM
பெங்களூரு: கால்நடை ஆரோக்கியத்தை, பராமரிக்கும் பொறுப்பிலிருந்து நழுவும், கால்நடை டாக்டர்களை, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்க, அரசு திட்டமிட்டுள்ளது.கர்நாடக கால்நடை துறையில், 2,600 டாக்டர்கள் உள்ளனர்.l கோமாரி நோய் உட்பட, கால்நடைகளை தாக்கும் வெவ்வேறு வகையான நோய்களை ...

மின்சார வழித்தட பிரச்னை: கேரளா - தமிழகம் ஆலோசனை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மத்திய வழித்தடத்தில், மின்சாரம் கொண்டு செல்வதில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மத்திய அரசின், 'பவர் கிரிட்' நிறுவனம் வாயிலாக, தமிழகத்தில் இருந்து, கேரளாவுக்கு மின்சாரம் செல்கிறது. அதே போல, பிற மாநிலங்களில் ...

டிப்ளமா ஆசிரியர் விண்ணப்பிக்க இன்று கடைசி

Wednesday June 28th, 2017 12:00:00 AM
சென்னை: பள்ளிக் கல்வித்துறை நடத்தும், 'டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்புகள் நடத்தப்படுகின்றன. அரசு ...

அரசு மருத்துவமனைகளில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
சென்னை: ''தமிழக அரசு மருத்துவ மனைகளிலும், விரைவில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்படும். அதற்கான பேச்சு நடந்து வருகிறது,'' என, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.சென்னை, அப்பல்லோ மருத்துவமனை, 'ஏர் ஆம்புலன்ஸ்' எனப்படும், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி உள்ளது. இதன் துவக்க ...

பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, பி.ஆர்க்., 'அட்மிஷன்' விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியாகின. அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 53 ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகளில், 2,760 பி.ஆர்க்., இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்காக, அண்ணா பல்கலை ...

ஐ.டி.ஐ., கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீடு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
சென்னை: தமிழகத்தில், ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், கவுன்சிலிங் விபரத்தை, இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார், ஐ.டி.ஐ., நிறுவனங்களில், 2017க்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 23ல் துவங்கியது. கவுன்சிலிங் நடைபெறும் நாள், நேரம், இடம் குறித்த ...

கால்நடைகள் கணக்கெடுப்பு ஜூலை 15ல் துவக்கம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
தேசிய அளவிலான, 20வது கால்நடைகள் கணக்கெடுப்பு, ஜூலை, 15ல் துவங்குகிறது.வழக்கமாக, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, தேசிய கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்பு புள்ளி விபரமானது, அரசின் கொள்கை மற்றும் விவசாயிகளுக்கான நன்மை பெறும் திட்டங்களை வகுக்க பயன்படுத்தப்படுகிறது. நடப்பாண்டு, 20வது ...

தடையின்றி இடு பொருட்கள் விவசாயிகளுக்கு தர உத்தரவு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
பல மாவட்டங்களில், பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு இடு பொருட்களை தட்டுபாடின்றி வினியோகிக்க, வேளாண் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் கோடைக்கு பின், குறுவை பருவ நெல் சாகுபடி துவங்கும். பல மாவட்ட விவசாயிகள் நெல்லுக்கு பதிலாக, எண்ணெய் வித்துக்கள், ...

அரசு சார்பில் இன்று ஜி.எஸ்.டி., கருத்தரங்கு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
சென்னை: தமிழக அரசின் வணிக வரித்துறை சார்பில், சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., குறித்த, மாநில அளவிலான கருத்தரங்கம், இன்று மாலை, 4:00 மணிக்கு, சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம், நாடு முழுவதும், ஜூலை, 1 முதல் அமலாக உள்ளது. எனவே, அனைத்து வணிகர்களுக்கும், ...

எழுத்தாளர் கழனியூரன் மறைவு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
சென்னை : 'கதை சொல்லி' இதழின் பொறுப்பாசிரியரும், எழுத்தாளருமான கழனியூரன், நேற்று காலமானார். அவரின் இறுதி சடங்கு, இன்று மாலை, சொந்த ஊரான கழுநீர்குளத்தில் நடக்கிறது.நாட்டுப்புற எழுத்தாளர், கி.ரா.,வின் இலக்கிய வாரிசாக அறியப்பட்ட, கழனியூரன் என்ற அப்துல்காதர், 63, புற்றுநோய் பாதிப்பால், சென்னையில் ...

'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பிழக்கிறது பிளஸ் 2 மதிப்பெண்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
'நீட்' தரவரிசை பட்டியலின்படி மட்டுமே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு, மவுசு அதிகரித்துள்ளது. 'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, தமிழக அரசு ...

தொழில் முதலீடு: தமிழகம் பின்னடைவு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் பின்தங்கியது. 2016ல், தொழில் துவங்க அனுமதி பெற்ற, 20 நிறுவனங்கள் வாயிலாக, 4,793 கோடி ரூபாய் முதலீட்டை மட்டுமே ஈர்த்துள்ளது.ஒரு மாநிலத்தில், ஐந்து கோடி ரூபாய்க்கு மேலான முதலீட்டில், தொழில் துவங்க விரும்பும் நிறுவனம், மத்திய அரசிடம் ...

குமரி, வால்பாறையில் தொடர் மழை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
குமரி, வால்பாறையில் தொடரும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை, மூன்று நாட்களாக இடைவெளி இல்லாமல் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை, நேற்று காலையிலும் தொடர்ந்ததால், பள்ளி, ...

'செட் - டாப் பாக்ஸ்' ஒரு மாதம் அவகாசம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
தமிழகத்தில், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில், கேபிள், 'டிவி' ஒளிபரப்பை துவங்குவதற்கு, அரசு கேபிள் நிறுவனத்திற்கு அளித்திருந்த காலக்கெடுவை, மத்திய அரசு, மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளது. தமிழகத்தில், 'செட் - டாப் பாக்ஸ்' மூலம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், கேபிள், 'டிவி' சேவையை, அரசு கேபிள் நிறுவனம் ...

'அமைச்சர் ராஜு என் ஹீரோ' : நடிகை கஸ்தூரி கிண்டல்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
'தெர்மாகோல் புகழ் அமைச்சரே, என் விருப்பமான சூப்பர் ஹீரோ' என, நடிகை கஸ்துாரி குறிப்பிட்டுள்ளார்.ரஜினி, பிரபு, விஜய்காந்த் என, 1990ல், பிசியாக வலம் வந்தவர் நடிகை கஸ்துாரி. திருமணமாகி வெளிநாடு சென்றவர், மீண்டும் இந்தியா திரும்பி வந்து, சில படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாய்ப்பு குறைவாக இருப்பதால், ...

சென்னையில் எம்.பி.,க்கள் ஓட்டு போட தேர்தல் கமிஷன் அனுமதி அவசியம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
தமிழகத்தில், ஓட்டு போட விரும்பும் எம்.பி.,க்கள், தேர்தல் கமிஷனிடம், முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.ஜனாதிபதி தேர்தல், ஜூலை, 17ல் நடைபெற உள்ளது. தமிழகத்தில், 233 எம்.எல்.ஏ.,க்கள், 39 லோக்சபா எம்.பி.,க்கள், 18 ராஜ்யசபா எம்.பி.,க்கள், ஓட்டளிக்க தகுதி உடையவர்கள்.தமிழக எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை வளாகத்தில், ஓட்டளிக்க ...

பி.இ., 2ம் ஆண்டு 30-ல் கவுன்சிலிங் துவக்கம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
காரைக்குடி: பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார், இன்ஜி., கல்லுாரியில் ஜூன், 30-ல் துவங்கி, ஜூலை 10- வரை நடக்கிறது.டிப்ளமா, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்ப வினியோகம், மே 17-ல் துவங்கியது. ஜூன் 19,- வரை ...

கடல் பசுவை விடுவித்த மீனவர்களுக்கு இழப்பீடு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
ராமநாதபுரம்: வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட கடல் பசு, வலையில் சிக்கியது. வலையை அறுத்து மீண்டும் அதை கடலில் விட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.மன்னார் விளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில், அடுத்த, 10 ஆண்டுகளுக்கான வன உயிர்களை காப்பதற்கான திட்டமிடுதல் குறித்த ஆலோசனை கூட்டம், ...

மருத்துவ படிப்புக்கு முதல் நாளில் 8,379 விண்ணப்பம் வினியோகம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
சென்னை: மருத்துவ படிப்பு களுக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கிய முதல் நாளில், 8,379 விண்ணப்பங்கள் விற்பனையாகின. தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான, விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. அரசு மருத்துவ கல்லுாரிகளில், மாணவர்கள், ...

'டெக்ஸ்டைல்ஸ் இந்தியா' கண்காட்சி 30ல் துவக்கம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
ஈரோடு: ''குஜராத் மாநிலம், காந்தி நகரில், வரும், 30 முதல் ஜூலை, ௨ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்க உள்ள, 'டெக்ஸ்டைல்ஸ் இந்தியா - 2017' கண்காட்சியை, பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்,'' என, பெடக்ஸில் தலைவர் புருஷோத்தம் கே.வங்கா, ஈரோட்டில் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது: இந்திய ஜவுளியை உலக அளவில் விரிவாக்கம் ...

மதுக்கடைக்கு எதிர்ப்பு; மாஜிஸ்திரேட்டுக்கு மனு குமுறலில் காமராஜர் சதுக்க குடியிருப்புவாசிகள்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கோத்தகிரி : கோத்தகிரி ஜான் ஸ்டோன் சதுக்கத்தில் செயல்படும் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள், கோத்தகிரி மாஜிஸ்திரேட்டிடம் மனு வழங்கினர்.கோத்தகிரி ஜான் ஸ்டோன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைக்கு, கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு ...

சுற்றுலா பயணிகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கூடலுார் : முதுமலையில், வனப்பகுதிக்குள் நுழைந்த நான்கு சுற்றுலா பயணிகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியினுள், சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மீறுபவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், ...

சேற்றில் சிக்கிய ஐந்து வாகனங்கள் - சுற்றுலா வேனின் டயர் வெடித்ததால் பரபரப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
ஊட்டி : ஊட்டியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக, காந்தள் பகுதியில் நடக்கும் பாதாள சாக்கடை திட்ட குழிகளில், ஒரே நேரத்தில் ஐந்து வாகனங்கள் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது; ஒரு சுற்றுலா வேனின் டயர் நள்ளிரவில் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி நகராட்சி சார்பில், ...

சிவானந்தபுரத்தில் நீர் வினியோகம் 'கட்'

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கோத்தகிரி : கீழ் கோத்தகிரி, சிவானந்தபுரம் பகுதியில், நீர் வினியோகம் சீராக இல்லாததால், மக்கள் சிரமப்படுகின்றனர்.கோத்தகிரி அருகே, கெங்கரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் கோத்தகிரி சிவானந்தபுரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு, ஊராட்சி சார்பில், ஒரு நாள் விட்டு ஒரு ...

வனப்பகுதியில் குப்பை விலங்குகளுக்கு ஆபத்து

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கோத்தகிரி : கோத்தகிரி கோடநாடு செல்லும் சாலையோ ரம் உள்ள வனங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால், வன வளம் பாதிக்கிறது.கோத்தகிரி கோடநாடு செல்லும் சாலை யில், ஓம் நகர் உட்பட சில குக்கிராமங் கள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில், குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால், குடியிருப்புவாசிகள் ...

நடமாடும் காட்டெருமை அச்சத்தில் டிரைவர்கள்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
குன்னுார் : குன்னுார் வெலிங்டன், பிளாக்பிரிட்ஜ் பகுதிகளில் இரவில் காட்டெருமை சாலையில் உலா வருவதால், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.குன்னுார் பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வனப்பகுதி அருகேயுள்ள தேயிலை தோட்டங்களில் அதிகளவில் உலா வருகின்றன. ...

பாதுகாப்பு கொடுங்க! : ஓ.என்.ஜி.சி., கோரிக்கை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
சென்னை: 'தமிழகத்தில், இயற்கை எரிவாயு எடுக்கப்படும் இடங்களில், போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, டி.ஜி.பி.,யிடம், ஓ.என்.ஜி.சி., அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் எனப்படும், ஓ.என்.ஜி.சி., கடலுார் மாவட்டம், பெரிய கோவில்குப்பத்தில், இயற்கை எரிவாயு எடுத்து வருகிறது. ...

கூடலூர், பந்தலூரில் கன மழை: வீடுகள் பாதிக்கப்பட்டதால் தவிப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கூடலுார் : கூடலுார், பந்தலுார் பகுதிகளில், கடந்த இரு தினங்களாக தொடரும் கன மழையினால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது; சில வீடுகள் இடிந்ததால், இரவில் மக்கள் தவித்தனர்.கூடலுார், பந்தலுார் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நள்ளிரவில் பெய்த கன மழையினால், இரும்பாலம் அருகே ...

எஸ்.பி., அலுவலகத்தில் நவீன 'மானிட்டர்'

Wednesday June 28th, 2017 12:00:00 AM
ஊட்டி : ''மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை ஒரே இடத்தில், கண்காணிக்க மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், நவீனமயமான கண்காணிப்பு மானிட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எஸ்.பி., முரளிரம்பா தெரிவித்தார்.நீலகிரியில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட தாலுகா ...

பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
குன்னுார் : குன்னுாரில் பொது இடங்களில் புகை பிடித்த, 10 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை உள்ள நிலையில், சமீப காலமாக இவற்றை பலரும் கடைபிடிக்காமல் பொது இடங்களில் புகை பிடித்து வந்தனர். குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், பூங்காக்கள், ...

சட்ட படிப்பு: தரவரிசை பட்டியல் வெளியீடு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
சென்னை: அரசு சட்டக் கல்லுாரிகளில், ஐந்தாண்டு பட்டப்படிப்புக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அரசு சட்டக் கல்லுாரிகளில், எல்.எல்.பி., - எல்.எல்.பி., 'ஹானர்ஸ்' படிப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், விண்ணப்பங்களை பரிசீலித்த பின், நேற்று, பிளஸ் 2 மதிப்பெண், 'கட் - ஆப்'படி ...

கீழ்நாடுகாணியில் வீணாகும் கண்காணிப்பு கோபுரம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கூடலுார் : கீழ்நாடுகாணியில் மாவோ யிஸ்ட் கண்காணிப்புக்காக அமைக்கப்பட்ட கோபுரம் பயனற்று கிடக்கிறது.நீலகிரி மாவட்டம் எல்லைக்குள் மாவோயிஸ்டுகள் நுழைவதை தடுக்க, எல்லையை ஒட்டிய வனப்பகுதிகளில், வனத்துறையினர் உதவியுடன் அடிக்கடி ரோந்து பணி நடந்து வருகிறது. இந்நிலையில், கீழ்நாடுகாணி ...

சோலூர் மட்டத்தில் சுகாதார சீர்கேடு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கோத்தகிரி : கோத்தகிரி அருகே, சோலுார்மட்டம் பகுதியில், பொதுக் கழிப்பிடம் பராமரிப்பின்றி உள்ளதால், மக்கள் திறந்தவெளிகளை கழிப்பிடங்களாக பயன்படுத்துகின்றனர்.கோத்தகிரி, தேனாடு ஊராட்சிக்குட்பட்ட சோலுார்மட்டத்தில், ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள பஸ் ஸ்டாண்டை ஒட்டி, கழிப்பிடம் ...

முதுமலை அருகே கார் விபத்து

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கூடலுார் : முதுமலை அபாயாரண்யம் அருகே, கார் கவிழ்ந்த விபத்தில், கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்தது.கேரளா மாநிலம் பெருந்தல்மன்னா பகுதியை சேர்ந்த, ஐந்து சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம், மாலை, கூடலுார் வழியாக மைசூர் சென்றனர். இரவு, 7:00 மணிக்கு முதுமலை புலிகள் ...

வங்கியில் பயிர் கடன் தருவதில் தாமதம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
ஊட்டி : ஊட்டி அருகே, தும்மனட்டி கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் தாமதத்தால் முற்றுகையிட்ட உறுப்பினர்கள் 'டெபாசிட்' தொகையை திரும்ப கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி அடுத்துள்ள தும்மனட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், குந்தைசபை, பரலட்டி, மோரிகல், தும்மனாடா, கப்பச்சி, ...

குன்னூர் ஐயப்பன் கோவில் விழா

Wednesday June 28th, 2017 12:00:00 AM
குன்னுார் :குன்னுார் அருகே, வெலிங்டன் ஐயப்பன் கோவி லில், 30வது ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த, 25ம் தேதி பகவதி சேவை என அழைக்கப்படும் விளக்கு பூஜை, நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி பூஜைகளை செய்தனர். நேற்று முன்தினம் காலையில், மகா கணபதி ஹோமம், உஷாபூஜை, விஷ்ணு பூஜை, ...

காலை, மாலையில் பயணிகள் அவதி

Wednesday June 28th, 2017 12:00:00 AM
பந்தலுார் : 'தேவாலா-கூடலுார் இடையே பஸ் போக்குவரத்தை துவக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. பந்தலுாரிலிருந்து கூடலுார் செல்லும் நெடுஞ்சாலையில் தேவாலா பகுதி அமைந்துள்ளது. இதனை சுற்றிலும் தேவாலா ஹட்டி, வாழவயல், கைதக்கொல்லி, ரவுசன்மலை, நீர்மட்டம், மூச்சிக்குன்னு, கரியசோலை, தேவாலா ...

'மலர்ந்தும் மலராத' கொய்மலர் சாகுபடி தொழில்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் 'கொய்மலர்' சாகுபடி அதல பாதாளத்திற்கு சென்றதால், மலரின் விலை 1.50 பைசாவுக்கு விற்பனையாகிறது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடி விவசாயம் நலிவடைந்த நிலையில் கடந்த, 2006ம் ஆண்டில் மாற்று பயிர் திட்டமான கொய்மலர் சாகுபடியை மாநில அரசு அறிவித்தது. இதன் பேரில், ...

கரியகாளியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
பொள்ளாச்சி: வடசித்துார், குருநல்லிபாளையத்தில், கரியகாளியம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.கிணத்துக்கடவு ஒன்றியம், வடசித்துார் அருகே குருநல்லிபாளையம் உள்ளது. இங்குள்ள பழமையான ஸ்ரீகரியகாளியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டது. இக்கோவில் மகா கும்பாபிேஷக விழா கடந்த 24ம் தேதி ...

சர்வீஸ் ரோட்டில் தேங்கியது மழைநீர்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில் மழை பெய்து வருவதால், அரசு மேல்நிலைப்பள்ளி சர்வீஸ் ரோட்டில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. கிணத்துக்கடவில், நான்கு வழிச்சாலை பணியில், மேம்பாலம் ...

சில இடங்களில் மட்டும் மழை : வானிலை மையம் தகவல்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கேரளாவில், மே, 30ல் துவங்கிய, தென்மேற்கு பருவ மழை, நாடு முழுவதும் பரவியது. தமிழகம், ஆந்திரா தவிர அனைத்து மாநிலங்களிலும், பெரும்பாலான பகுதிகளில், இரண்டு நாட்களுக்கு அடைமழை பெய்யும் என, கணிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், 80 சதவீத மழையை கொடுக்கும், தென்மேற்கு பருவ மழை, இந்த ஆண்டு மே, 30ம் தேதியே கேரளாவில் ...

ரியல் எஸ்டேட் ஆணைய தலைவரை தேர்வு செய்ய குழு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் மற்றும் தீர்ப்பாய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள், ஜூன், 22ல் வெளியிடப்பட்டன. இதன்படி, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், தீர்ப்பாயம் அமைக்க ...

சுகாதார நிலைய சுவற்றை தொட்டால் 'ஷாக்' - அச்சத்தில் ஊழியர்கள்; அதிர்ச்சியில் மக்கள்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ராமபட்டணம் ஆரம்ப சுகாதார நிலைய சுவற்றில், மின்சாரம் பாய்வதால் ஊழியர்கள் மட்டுமன்றி, சிகிச்சை பெற வரும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்டது ராமபட்டணம் கிராமம். கேரள எல்லையில் உள்ள, 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் ...

கனமழையால் வெள்ள பெருக்கு குரங்கு அருவில் குளிக்க தடை!

Wednesday June 28th, 2017 12:00:00 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆழியாறு சுற்றுப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு ...

தொற்றுநோயை தடுக்குமா அங்கலக்குறிச்சி ஊராட்சி?

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கோட்டூர் : கோட்டூரை அடுத்த அங்கலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு முன் குப்பைகள் குவிந்து கிடப்பதால், சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, பள்ளிக் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. ஆனைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட அங்கலக்குறிச்சி ஊராட்சி பகுதிகளில், சுகாதாரத்தை பேணி ...

போடிபட்டி சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
உடுமலை : விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், உடுமலை அடுத்த போடிப்பட்டி சாலையில், எச்சரிக்கை வர்ணம் பூசப்பட்டது. உடுமலையில் நகரில், பெருகி வரும் வாகனங்களின் இயக்கத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தவிர, விதிமீறி இயக்குதல், அதிவேகம் போன்றவற்றால் அவ்வப்போது விபத்து ...

மாட்டிறைச்சி கடைகளை அகற்ற கோரிக்கை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
பொள்ளாச்சி : கோவிலுக்கும், சந்தைக்கும் செல்லும் மக்களுக்கு இடையூறாக இருக்கும் மாட்டிறைச்சி கடைகளை அகற்ற, நெகமம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெகமம் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, நாகர் மைதானம் செல்லும் வழியில் (மழை நீர் ஓடையின் கரையில்) மாட்டிறைச்சி கடைகள் செயல்படுகின்றன. வாரத்தில் ...

ஜி.எஸ்.டி., அறிமுக விழா : பார்லி.,யில் இன்று ஒத்திகை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
புதுடில்லி: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்வதற்கான விழா, வரும், 30ம் தேதி இரவு நடக்க உள்ள நிலையில், பார்லிமென்ட்டில், இன்று அதற்கான ஒத்திகை நடக்க உள்ளது. ஜூலை, 1 முதல் ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக, இந்த வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்யும் விழா, ...

புனர்பூச பேராபிேஷக விழா

Wednesday June 28th, 2017 12:00:00 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே தாடகைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆத்மநாதவனம் சமுக்தியாம்பிகை கோவிலில், ஆனி புனர்பூச பேராபிஷேக விழா நடந்தது. கணபதிபூஜையுடன் துவங்கிய விழாவில், லலிதசஹஸ்ரநாம பாராயணமும் திரிசதி அர்ச்சனையும் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான சமுக்தியாம்பிகை பேராபிஷேகமும் ...

போடிபட்டி சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
உடுமலை : விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், உடுமலை அடுத்த போடிப்பட்டி சாலையில், எச்சரிக்கை வர்ணம் பூசப்பட்டது. உடுமலையில் நகரில், பெருகி வரும் வாகனங்களின் இயக்கத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தவிர, விதிமீறி இயக்குதல், அதிவேகம் போன்றவற்றால் அவ்வப்போது விபத்து ...

காத்திருப்பு போராட்டம் 8வது நாளாக தொடர்கிறது

Wednesday June 28th, 2017 12:00:00 AM
உடுமலை : உடுமலை, ஜல்லிபட்டி நால்ரோடு அருகே பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த 'டாஸ்மாக்' மதுக்கடையை அகற்றக்கோரி கடந்த, 20ம் தேதியில் இருந்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும், காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக ...

1,330 திருக்குறள் ஒப்புவித்து 5 வயது மாணவி சாதனை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
சிறுவங்குணம், செய்யூர் அடுத்த, சிறுவங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கனிஷ்கா, திருக்குறளில் உள்ள, 1,330 குறள்களையும் ஒப்புவித்து, சாதனை படைத்து வருகிறார்.அரசு ஆரம்ப பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரியும், மகேஷ்பாபு என்பவரின் மகள் கனிஷ்கா. ஓராண்டாக ஆசிரியர் மூலமாக திருக்குறளை பயின்று வந்தார். ...

தக்காளி கொள்முதல் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

Wednesday June 28th, 2017 12:00:00 AM
உடுமலை : உடுமலை தினசரி சந்தையில், தக்காளியின் கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உடுமலை சுற்றுவட்டாரத்திலுள்ள ஆண்டியக்கவுண்டனுார், ராகல்பாவி, வாளவாடி, போடிபட்டி, தளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒரு ...

கூட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
உடுமலை : தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கூட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கருதி, படகு சவாரி, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடுமலையில் இருந்து, மூணாறு செல்லும் சாலையில், தமிழக -கேரளா மாநிலங்களின் எல்லையொட்டிய ...

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
உடுமலை : உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல் நிலைப்பள்ளியில், நாளை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடக்கிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மற்றும் உடுமலை வட்டார வள மையம் சார்பில் இந்த முகாம், காலை, 9:30 மணி முதல் மாலை, 3:00 மணி வரை நடக்கிறது. ...

சித்திரைச்சாவடிக்கு வெள்ளம் வந்தாச்சு!

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கோவை : மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், சித்திரைச்சாவடி அணைக்கட்டுக்கு தண்ணீர் வந்துள்ளது. இங்கிருந்து, கால்வாயில் நீர் வழிந்தோடிச் செல்கிறது.எதிர்பார்த்தபடி, தென்மேற்கு பருவ மழை, இம்மாதம், 3ல் துவங்கியது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள ...

புட்டுவிக்கி ராஜவாய்க்காலில் மீண்டும் ரோடு போட முயற்சி!

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கோவை : கோவை - பாலக்காடு ரோட்டில் இருந்து புட்டுவிக்கி ரோட்டை இணைக்கும் வகையில், ராஜவாய்க்காலில் மீண்டும் ரோடு போடுவதற்கான பணி துவங்கி உள்ளது.மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் கூடுதுறையில் துவங்கும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர் மாவட்டம் வழியாக பயணித்து, கரூர் காவிரியில் கலக்கிறது. ...

நேரில் வந்து பார்க்கலாம்!

Wednesday June 28th, 2017 12:00:00 AM
முக்கியமான மூன்று ஆலைகள் தான், பவானி ஆற்றில் கழிவுநீரைக் கலப்பதாக சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாய அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்; இதுபற்றி, மேட்டுப்பாளையத்தில் உள்ள யூ.பி.எல்., கம்பெனி நிர்வாகம் உட்பட சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகங்கள் தரப்பில் கேட்டபோது, அவர்கள் அதை முற்றிலுமாக ...

பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் கட்டுரை போட்டி

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கோவை : கோவையில் உள்ள, மனித நேயப்பேரவை சார்பில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது.ஜூன், 29ம் தேதி காலை 10:30 மணிக்கு, வடவள்ளி மருதமலை தேவஸ்தான பள்ளியில் இப்போட்டி நடக்கிறது. வான்சிறப்பு, அன்புடைமை மற்றும் செய்ந்நன்றியறிதல் ...

வீட்டு பர்னீச்சர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கோவை : ஆர்.எஸ்.புரம், வுட்ஸ் கார்டன் ஷோரூமில் பர்னீச்சர் பொருட்களுக்கான அதிரடி விற்பனை துவங்கியுள்ளது.வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப வீட்டுக்குத் தேவையான தரமான பர்னீச்சர்களை வழங்குவதில், வுட்ஸ் கார்டன் ஷோரூம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. குன்னுார், ஒசூர் உள்ளிட்ட ...

மகப்பேறு நிதியுதவி; ஆன்-லைனில் கண்காணிப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கோவை : கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவதை, 'ஆன்-லைனில்' மொபைல் போனில் கண்காணிக்கும் வகையில், நடைமுறை மாற்றப்படுகிறது. இதுதொடர்பாக, மாநகராட்சி நகர் நல மைய செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் ...

மூன்று வீடுகளில் 39 சவரன் நகை திருட்டு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கோவை : கோவையில் பூட்டப்பட்ட மூன்று வீடுகளை உடைத்து, 39 பவுன் நகை திருடப்பட்டது.பீளமேடு, விளாங்குறிச்சி ரோடு, வி.ஐ.பி., நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி, 56; எட்டிமடையிலுள்ள தனியார் இன்ஜி., கல்லுாரியில் பேராசிரியர்.சென்னைக்கு குடும்பத்துடன் சென்றவர், 26ம் தேதி இரவு வீடு திரும்பினார். ...

நொய்யலை காக்க தன்னார்வலர்கள் உறுதி!

Wednesday June 28th, 2017 12:00:00 AM
குறிச்சி : கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் அனுபவ பகிர்வு கூட்டம் நடந்தது; அதில், நொய்யல் நீர் நிலை புனரமைப்புப் பணிகளுக்கு உதவிய பலரும் கவுரவிக்கப்பட்டனர்.கோவை, சுந்தராபுரத்திலுள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடந்த இக்கூட்டத்தில், 'ராக்' கவுரவ செயலாளர் ரவீந்திரன், 'சிறுதுளி' ...

கோவை - நாகர்கோவில் ரயில் நேரம் மாற்றம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கோவை : கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று முதல் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக புறப்பட்டு செல்கிறது.கோவை - நாகர்கோவிலுக்கு, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக எக்ஸ்பிரஸ் ரயில், 2008 முதல் (வண்டி எண்:16610) இயக்கப்படுகிறது. இதே ...

லேப்டாப், சைக்கிள் திருட்டால் பாதிக்கும் தலைமையாசியர்கள் : அமைச்சரிடம் வலியுறுத்தல்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மதுரை: 'தமிழகத்தில் லேப்டாப், சைக்கிள் திருட்டு நடந்த அரசு பள்ளிகளில் அதற்கான பணத்தை தலைமையாசிரியர்கள் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்,' என கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் வலியுறுத்தப்பட்டது.மதுரையில், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழகம் மாநில ...

லாரிகளால் இடையூறு ஆய்வு செய்ய உத்தரவு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மதுரை: மேலுார் கொட்டகுடி பழனிக்குமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்சி- - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பட்டவாய்த்தலை-குளித்தலை இடையே, டோல்கேட் பகுதியில் 10 கி.மீ., துாரத்தில் மணல் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அனுமதியின்றி ...

மதுரை பாஸ்போர்ட் அதிகாரிக்கு விருது

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மதுரை: சிறந்த சேவையாற்றியதற்காக, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணிஸ்வர ராஜாவிற்கு 'பாஸ்போர்ட் சேவா புரஸ்கார் விருது' வழங்கப்பட்டுள்ளது. டில்லியில் நடந்த விழாவில்,மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜ் விருது வழங்கினார். விரைந்து பாஸ்போர்ட் வழங்குதல், விண்ணப்பதாரர்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி ...

ஒரு பயிற்சிக்கு இரு அறிவிப்பு குழப்பத்தில் ஆசிரியர்கள்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கோவை : தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சிக்கு, பள்ளிக்கல்வித்துறை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், இருவேறு தேதிகள் குறிப்பிட்டுள்ளதால், ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் ...

தீக்குளிக்க முயன்ற தம்பதிக்கு காபி கொடுத்து தன்னம்பிக்கை!

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கோவை : வீட்டை காலி செய்ய வற்புறுத்தி, தொந்தரவு செய்ததால் மனமுடைந்த தம்பதி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்தனர். அவர்களை பாதுகாத்த போலீசார், காபி, வடை கொடுத்து, தன்னம்பிக்கையூட்டி வழியனுப்பி வைத்தனர்.கணபதி காந்திமாநகரை சேர்ந்தவர் பிஜூ, 45; வெல்டர், பைக் ...

பெரியாறு அணையில் கனமழை : ஒரே நாளில் ஒரு அடி உயர்வு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கூடலுார்: பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த கன மழையால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது. நாளைக்குள் அணையின் நீர்மட்டம் 112 அடியை எட்டும் நிலை உள்ளதால் தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ...

மதுரை குடிநீருக்கு முல்லை பெரியாறு தண்ணீர் : விழாவில் அறிவிப்பாரா முதல்வர்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மதுரை: மதுரையின் தாகம் தீர்க்கும் வைகை அணை வறண்டிருக்கும் நிலையில், முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பான அறிவிப்பை,மதுரையில் ஜூன் 30ம் தேதி எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவிக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்ப்பில் ...

'பிசியோதெரபிஸ்ட்' கவுன்சில் அமைக்கப்படுமா : கிடப்பில் போடப்பட்ட அரசாணை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மதுரை: 'கடந்த 2008ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, பிசியோதெரபிஸ்ட்களுக்கு தனி கவுன்சில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.மருத்துவ துறையில் டாக்டர்கள், செவிலியர்கள், 'பார்மசிஸ்ட்' போன்றோருக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும், தனித்தனி ...

பத்து ஆண்டுகளாக கிடப்பில் நீர் வழிச்சாலை : நதிகள் இணைப்பு குழு உறுப்பினர் வேதனை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
காரைக்குடி: ''நதிகள் இணைப்பு நீர்வழிச்சாலை திட்டம் தமிழகத்தில் ஏற்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்த நிலையிலும் அத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை,'' என நதிகள் இணைப்பு குழு உயர்மட்ட குழு உறுப்பினர் ஏ.சி.காமராஜ் கூறினார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த நதிநீர் ...

மனிதர்களைப் படியுங்கள்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
எதிரிகளாகவும் துரோகிகளாகவும் நாம் பார்ப்பவர்களே நம்முடைய வளர்ச்சிக்கு நிச்சய மாக மறைமுக காரணமாகஇருப்பார்கள் என்பதை மறக்க முடியாது. உண்மையில் நமக்கு எதிராக யாராவது பேசினால் அவர்களை தண்டித்தாக வேண்டும், இல்லையெனில் குறைந்தபட்சம் அவர்கள் உறவையாவது துண்டித்தாக வேண்டும் என்றே மனம் நினைக்க ...

மின்சார வழித்தட பிரச்னை : கேரளா - தமிழகம் ஆலோசனை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மத்திய வழித்தடத்தில், மின்சாரம் கொண்டு செல்வதில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மத்திய அரசின், 'பவர் கிரிட்' நிறுவனம் வாயிலாக, தமிழகத்தில் இருந்து, கேரளாவுக்கு மின்சாரம் செல்கிறது. அதே போல, ...

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
புவனகிரி : புவனகிரி அருகே மணல் கடத்திச்சென்ற, மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.புவனகிரி பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் புவனகிரி அடுத்த மணவெளி அய்யனார் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். ...

கற்பக விநாயகர் கோவிலில் இன்று ராஜகோபுரம் கும்பாபிஷேகம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கடலுார் : கடலுார் பாதிரிக்குப்பம் கற்பக விநாயகர் கோவில் நுழைவு வாயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. கடலுார் பாதிரிக்குப்பம், கூட்டுறவு நகர் கற்பக விநாயகர் கோவில் நுழைவு வாயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று கணபதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடந்தது. ...

ைஹமாஸ் விளக்கு: எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ைஹமாஸ் விளக்கை பாண்டியன் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.பரங்கிப்பேட்டை பேரூராட்சி சார்பில் மீராப்பள்ளி தெருவில் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. விளக்கு இயக்க விழாவிற்கு, ...

ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
விருத்தாசலம் : செங்கல் சேம்பர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த பரவளூர் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள், 30க்கும் மேற்பட்டோர், ஆர்.டி.ஓ., அலுவலகத்தை நேற்று காலை 10:00 மணியளவில் முற்றுகையிட்டனர்.அப்போது, ...

சுப்ரீம் அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கடலுார் : கடலுாரில் சுப்ரீம் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. முதல் துணை நிலை ஆளுனர் சரவணன் விழாவை துவக்கி வைத்து, புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தினார். முன்னாள் ஆளுனர் ராஜலட்சுமி செல்வகாந்தி சேவைத் திட்டங்களை துவக்கி வைத்தார். முன்னாள் ஆளுனர் கல்யாண்குமார் ...

விருதை, நெய்வேலி அரசு பண்ணைகளில் 53 லட்சம் கன்றுகள் உற்பத்திக்கு இலக்கு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
விருத்தாசலம் : விருத்தாசலம், நெய்வேலி அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் 52 லட்சத்து 57 ஆயிரம் முந்திரி, பப்பாளி உள்ளிட்ட தோட்டக்கலை கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிட்டு, அதற்கான பணிகள் துவங்கியுள்ளன.விருத்தாசலம், நெய்வேலி அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் வி.ஆர்.ஐ., 3 வீரிய ஒட்டு ரக முந்திரி, ...

பட்டமளிப்பு விழா

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கடலுார் : கடலுார் ஸ்ரீ லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.தாளாளர் அசோக்மல் சோரடியா வரவேற்றார். மழலையர் வகுப்பு முடித்த மாணவர்களை பாராட்டும் விதமாக பட்டமளித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.யு.கே.ஜி., மாணவர்கள் திறமையை வெளிக்காட்டும் ...

மின் இணைப்பு பழுது குடிநீர் தட்டுப்பாடு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மங்கலம்பேட்டை : மு.பட்டி காலனியில் குடிநீர் மோட்டார் மின் இணைப்பு சரி செய்யாததால், அப்பகுதி மக்கள் குடிநீர் தேடி அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது.மங்கலம்பேட்டை அடுத்த மு.பட்டி காலனி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் போர்வெல் மோட்டார் மின் இணைப்பு கடந்த ஒரு வாரத்திற்கு முன் ...

காற்றில் பறந்த டி.எஸ்.பி., உத்தரவு போலீசார் மீது பொது மக்கள் அதிருப்தி

Wednesday June 28th, 2017 12:00:00 AM
வேப்பூர் :வேப்பூரில் அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பார்களை டி.எஸ்.பி., அகற்ற உத்தரவிட்ட நிலையில், அவை மீண்டும் செயல்படுவதால், போலீசார் மீது பொது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 31ம் தேதியுடன் தேசிய, மாநில நெடுஞ்சாலையோர டாஸ்மாக் கடைகள், ...

ஆமை வேகத்தில் கஸ்டம்ஸ் சாலைப்பணி - கலெக்டர் ஆய்வு செய்து துரிதப்படுத்துவாரா?

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கடலுார் : கடலுார் - கண்டரக்கோட்டை செல்லும் பழைய கஸ்டம்ஸ் சாலைப்பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணியை துரிதப்படுத்த கலெக்டர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கடலுார் ஆல்பேட்டையில் இருந்து பெண்ணையாற்று படுகை வழியாக கண்டரக்கோட்டை வரை செல்லும் பழைய கஸ்டம்ஸ் சாலையை மீண்டும் புதுப்பித்து தார் ...

நிர்வாகிகள் பதவியேற்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கடலுார் : கடலுாரில், அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. மாவட்ட முன்னாள் ஆளுனர் ராஜன், புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல் துணை நிலை ஆளுனர் சரவணன், சேவைத் திட்டங்களை வழங்கி புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். 3 அரசுப் பள்ளிகளுக்கு ...

முத்துமாரியம்மன் கோவிலில் 30ம் தேதி கும்பாபிஷேகம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கடலுார் : கடலுார் வண்ணாரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 30ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, நாளை (29ம் தேதி) காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையும், 11:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனையும், மாலை 4:30 மணிக்கு பிரவேச பலி, முதல் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. ...

ஆர்ப்பாட்டம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கடலுார் : கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் ஜெய மணி தலைமை தாங்கி னார். அமைப்பு செயலர் ஆனந்தராஜ் வரவேற்றார். பொருளாளர் உத்திரவேல் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் நாகராஜன், இளைஞரணி செயலர் மங்கா பிள்ளை பேசினர். ...

ஜி.எஸ்.டி., விழிப்புணர்வு முகாம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கடலுார் : கடலுார் டவுன்ஹாலில் நாளை ஜி.எஸ்.டி., சட் டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. கடலுார் டவுன் மற் றும் புறநகர் வணிகவரி அலுவலகங்கள் சார்பில் ஜி.எஸ்.டி., சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் கடலுார் டவுன்ஹாலில் 29ம் தேதி மதியம் 3:00 மணிக்கு நடக்கிறது. வேலுார் வணிகவரித் துறை இணை ...

கோடை உழவு மானியம் உதவி இயக்குனர் அழைப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
சிறுபாக்கம் : கோடை உழவு மானியம் பெற்று பயனடையுமாறு, மங்களூர் வேளாண் உதவி இயக்குனர் மோகன்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: மங்களூர் ஒன்றியத்தில் மானாவரி நில மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில், முதல் கட்டமாக மானாவரி விவசாயிகளுக்கு கோடை உழவு ...

குடிநீர் பிரச்னையை தீர்க்க த.வா.க., கோரிக்கை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திட்டக்குடி : தமிழக வாழ்வுரிமைக் கட்சி மங்களூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் திட்டக்குடியில் நடந்தது.கூட்டத்திற்கு மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலர் சுரேந்தர் தலைமை தாங்கினார். நகர செயலர் சீனிவாசன் வரவேற்றார். மாவட்டச் செயலர் சின்னதுரை, தீர்மானங்களை வலியுறுத்தி பேசினார். ...

பெண் மீது தாக்குதல் தம்பதி தலைமறைவு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
செஞ்சி : செஞ்சியில் பெண்ணை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.செஞ்சி முத்து பாரதி தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்; இவரது 5 வயது பெண் குழந்தையை, அதே பகுதியை சேர்ந்த ஷேக் உசேன் அடித்து விட்டார். இதை தட்டி கேட்ட பன்னீர்செல்வத்தின் மனைவி சுமதியை 36; ஷேக் உசேன், அவரது மனைவி ...

உண்டு, உறைவிடப் பள்ளி மாணவர்கள் மறியல்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கச்சிராயபாளையம் அடுத்த கோமுகி அணை அருகில், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி, 6ம் வகுப்பு படித்த அரவிந்த் என்ற மாணவர், கடந்த 24 ம் தேதி கோமுகி ...

மேல்மலையனூர், கடலியில் சர்வதேச யோகா தின விழா

Wednesday June 28th, 2017 12:00:00 AM
செஞ்சி : மேல்மலையனுார், கடலி பகுதியில், பா.ஜ., சார்பில் சர்வதேச யோகா தின விழா நடந்தது.மேல்மலையனுார் ஒன்றிய பா.ஜ., சார்பில், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மற்றும் கடலி கிராமத்தில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர் செல்வம், ...

செஞ்சி தொகுதியில் விதைப்பண்ணை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
செஞ்சி : செஞ்சி தொகுதியில், அரசு விதைப்பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபையில், வேளாண்மை துறை விவாதத்தில் பங்கேற்று, செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான் பேசுகையில், செஞ்சி தொகுதியில் நவீன வேளாண்மை பண்ணை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க ...

விழுப்புரத்தில் வீடு புகுந்து 5 சவரன் நகை 'அபேஸ்'

Wednesday June 28th, 2017 12:00:00 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் வீடு புகுந்து, பெண்ணிடம் ஐந்து சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.விழுப்புரம் அடுத்த செஞ்சி ரோட்டிலுள்ள டி.கொய்யாதோப்பு கிராமத்தை சேர்ந்த சந்தானம் மனைவி விஜயலட்சுமி,42; இவர், நேற்று காலை 11:00 மணிக்கு வீட்டின் முன்பக்க கதவை தாழ்பாள் ...

தூர் வாரும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருக்கோவிலுார் : ஏற்கனவே துார் வாரப்பட்ட வாய்க்காலில், குடிமராமத்து திட்டத்தின் கீழ், மீண்டும் மேற்கொள்ளப்பட்ட துார் வாரும் பணியை, விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த விளந்தை பெரிய ஏரிக்கு, மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் ...

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
விருத்தாசலம் : குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் ஊராட்சி, ராஜிவ்காந்தி நகரில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, கடந்த மூன்று மாதங்களாக, முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததால், அப்பகுதி மக்கள் ...

அரசு மருத்துவ கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது.தமிழக அரசின் உத்தரவுபடி, விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம் நேற்று காலை துவங்கியது. ...

பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு வங்கி மூலம் கடனுதவி

Wednesday June 28th, 2017 12:00:00 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வங்கி மூலம் கடனுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் ...

டோல்கேட் அருகே வாகன விபத்து ஈச்சர் லாரி டிரைவர் படுகாயம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் லாரி டிரைவர் படுகாயமடைந்தார்.சென்னை அடுத்த குன்றத்துார் பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் 43. இவர், திருச்சியில் இருந்து தனியார் சொகுசு பஸ்சில் பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று ...

மூங்கில்துறைப்பட்டில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டில் பிளாஸ்டிக் அரிசி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.மூங்கில்துறைப்பட்டு மேட்டூர் பகுதியைச் சேர்ந்த உசேன்பாஷா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, கடந்த இரு நாட்களாக வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ...

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ரூ. 6 லட்சத்திற்கு பொருட்கள் கொள்முதல்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில், 6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு, நேற்று 200 மூட்டைகள் மக்காசோளம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதிகபட்சம் ரூ.1,640க்கும், குறைந்தபட்சம் ரூ.1,490க்கும் என ...

பஸ் நிலைய கடைகள் ஏலத்திற்கு தடை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் பஸ் நிலைய கடைகளுக்கான ஏலத்திற்கு‚ திருக்கோவிலுார் உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.திருக்கோவிலுார்‚ புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு வரும் 29ம் தேதி ஏலம் விடப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. மூடி ...

மரக்காணம் ஒன்றிய தி.மு.க., சிறுவாடியில் பொதுக்கூட்டம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மரக்காணம் : மரக்காணம் ஒன்றிய தி.மு.க., சார்பில், கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழா பொதுக்கூட்டம் நடந்தது.மரக்காணம் ஒன்றியம் சிறுவாடியில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் முருகன் வரவேற்றார். ஒன்றிய துணை செயலாளர் பாபு ...

பாடபுத்தகம் வழங்கல்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மயிலம் : மயிலம் ஒன்றியம், மோழியனுார் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.மயிலம் உதவி கல்வி அலுவலர்கள் ஆக்சிலியம் பெலிக்ஸ், கோவர்த்தனன், தலைமையாசிரியர் அருள்மொழிவர்மன் ஆகியோர், இலவச பாடபுத்தகங்களை வழங்கினர். இதில், ஆசிரியர்கள் சுகுமார், அருள்குமரன், ...

கடைக்காரர் மீது பீர் பாட்டில் தாக்குதல்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே பெட்டிக்கடைக்காரர் மீது போதை ஆசாமி பீர் பாட்டிலால் தாக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுாரைச் சேர்ந்த வேடி மகன் துரைமுருகன்,32; புதுப்பட்டு பகுதியில் குளிர்பான கடை வைத்துள்ளார்.ரங்கப்பனுாரை சேர்ந்த ...

விழுப்புரம் கமிட்டி எதிரில் கால்வாயில் விழுந்த மாடு மீட்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
விழுப்புரம் : விழுப்புரம் மார்க்கெட் கமிட்டி அருகே சாக்கடையில் விழுந்த பசுமாடு, மீட்கப்பட்டது.விழுப்புரம் மார்க்ெகட் கமிட்டி எதிரே, பொதுப் பணித் துறை அலுவலகம் அருகே உள்ள நகராட்சி கழிவுநீர் கால்வாயில், நேற்று மாலை 6:00 மணியளவில், பசுமாடு ஒன்று தவறி விழுந்தது.தகவலறிந்த தீயணைப்பு ...

நாகர் சிபிஎஸ்சி பள்ளியில் மாணவ கவுன்சில் பதவியேற்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் நாகர் சிபிஎஸ்சி., பள்ளியில் 9வது மாணவ கவுன்சில் குழு பதவியேற்பு விழா நடந்தது.பள்ளி தாளாளர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். எழிலரசி வரவேற்றார். முதல்வர் மேக்சிமஸ் எச்.ரோஸ், மக்கள் தொடர்பு அதிகாரி ராமானுஜம் ஆகியோர் முன்னிலை ...

மார்க்கெட் கமிட்டிக்கு இடம்தேர்வு தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
உளுந்துார்பேட்டை : திருநாவலுாரில் மார்க்கெட் கமிட்டி கட்டுவதற்கான இடஒதுக்கீடு செய்வது குறித்து, தாசில்தார் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது.உளுந்துார்பேட்டை தாலுகா, திருநாவலுார் சமத்துவபுரம் அருகே மார்க்கெட் கமிட்டி அமைப்பதற்கான இடத்தை பார்வையிட, குமரகுரு எம்.எல்.ஏ., நேற்று காலை 11:30 ...

மூலிகை பொருட்களுக்கு விழுப்புரத்தில் கண்காட்சி

Wednesday June 28th, 2017 12:00:00 AM
விழுப்புரம் : விழுப்புரம் இயற்கை வாழ்வியல் இயக்கம் சார்பில், மூலிகை பொருட்களுக்கான கண்காட்சி துவக்க விழா நடந்தது.விழுப்புரம் ஜெயசக்தி திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, ரோட்டரி சங்க தலைவர் காங்கேயன் தலைமை தாங்கினார். உதவி ஆளுநர் சரவணக்குமார், நிர்வாகிகள் சதீஷ், கந்தன், ராதாகிருஷ்ணன், ...

மதுபான கடத்தலை தடுக்க நடவடிக்கை கூடுதலாக மூன்று சோதனை சாவடிகள்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மரக்காணம் : புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மதுபானகடத்தலை தடுப்பதற்கு கூடுதலாக மூன்று இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.புதுச்சேரியில் இருந்து தமிழகப்பகுதியான சென்னை இ.சி.ஆர்., திண்டிவனம், மயிலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைவழியாக தினந்தேறும் அதிகளவு மதுபான கடத்தல் ...

களமருதூரில் சிறப்பு முகாம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
உளுந்துார்பேட்டை : களமருதுாரில் வண்டல் மண் எடுப்பதற்கான சிறப்பு முகாம் தாசில்தார் பாலசுப்ரமணியன் தலைமையில் நடந்தது.உளுந்துார்பேட்டை தாலுகா களமருதுாரில் வண்டல் மண் எடுப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு தாசில்தார் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் ...

கரசானூரில் கோவில் கட்டும் பணி வானூரில் சமாதானக் குழு கூட்டம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
வானுார் : கரசானுாரில், சிவன் கோவில் கட்டும் பிரச்னை தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது.வானுார் அடுத்த கரசானுார் கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிவன் கோவில் இருந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு, ஒரு தரப்பினர் கோவிலை இடித்துவிட்டு, புதிய கோவில் கட்ட பள்ளம் ...

விழுப்புரம் நகரில் சுகாதார சீர்கேடு நகராட்சி ஆணையரிடம் காங்., மனு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
விழுப்புரம் : விழுப்புரம் நகரில் சுகாதார சீர்கேடுகளை சீரமைக்க கோரி, நகராட்சி அலுவலகத்தில், காங்., சார்பில் மனு அளித்தனர்.விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில், ஆணையர் செந்தில்வேல் மாவட்ட காங்., தலைவர் சீனுவாசகுமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:விழுப்புரம் நகரில் புதியதாக ...

பறிமுதல் வாகனங்கள் காகுப்பத்தில் பொதுஏலம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள், வரும் 29ம் தேதி பொதுஏலம் விடப்படுகின்றன.விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வரும் 29ம் தேதி, காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் பொதுஏலம் ...

ஒலக்கூர் தி.மு.க., பொதுக்கூட்டம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திண்டிவனம் : ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க.,சார்பில், கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.ஒலக்கூரிலுள்ள அண்ணாதிடலில் நடந்த கூட்டத்திற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் சுபச்சந்திரன் வரவேற்றார்.கூட்டத்தில், பேச்சாளர் ...

மயிலம் தமிழ் அகாடமியில் மாதிரி போட்டித் தேர்வு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மயிலம் : மயிலம் தமிழ் அகாடமியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்விற்கான மாதிரி தேர்வு நடந்தது.தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகள் வரும் ஜூலை 2ம் தேதி நடக்கிறது.இதை முன்னிட்டு திண்டிவனத்தில் ...

கள்ளக்குறிச்சியில் பொதுக்கூட்டம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கள்ளக்குறிச்சி : விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற வைரவிழா பொதுக்கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுப்ராயலு, ...

வடக்கு மாவட்ட காங்., கட்சியினருக்கு உறுப்பினர் படிவம் வழங்கும் விழா

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திண்டிவனம் : விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., சார்பில், கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனம் நகர காங்., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பின், திண்டிவனம் மற்றும் மயிலம் சட்டசபை தொகுதிகளைச் ...

தனியார் பல்பொருள் அங்காடி உறுப்பினர் பதிவு துவக்க விழா

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஸ்ரீதிருமலை டிரேடர்ஸ் பல்பொருள் அங்காடியில் உறுப்பினர் பதிவு துவக்க விழா நடந்தது.கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே திருமலை தனியார் பொது விநியோக பல்பொருள் அங்காடி துவங்கப்படுகிறது. அரிசி, சர்க்கரை, எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள், உளுந்து, ...

'பிசியோதெரபிஸ்ட்' கவுன்சில் அமைக்கப்படுமா

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மதுரை;'கடந்த 2008ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, பிசியோதெரபிஸ்ட்களுக்கு தனி கவுன்சில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.மருத்துவ துறையில் டாக்டர்கள், செவிலியர்கள், 'பார்மசிஸ்ட்' போன்றோருக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும், தனித்தனி ...

கல்லூரிகளில் வாக்காளர் சேர்க்கைக்கு 'கணினி' அறிந்த மாணவர்கள் நியமனம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திண்டுக்கல்;புதிய வாக்காளர்களை அதிகளவில் சேர்க்க, கல்வி நிறுவனங்களில் கணினி கையாள தெரிந்த 5 மாணவர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.வாக்காளர் பட்டியலுக்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குறைக்கும் வகையில், தேர்தல் ஆணையம் 18 வயது ...

எழுத்தாளர் கழனியூரன் மறைவு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருநெல்வேலி;எழுத்தாளர் கழனியூரன் சென்னையில் காலமானார். இறுதி சடங்குகள், இன்று நெல்லை மாவட்டம் கழுநீர்குளத்தில் நடக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளத்தில் 1954ல் பிறந்தவர் எம்.எஸ்.அப்துல்காதர், 63. அங்குள்ள துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். தமது ஊரின் ...

மீன்குத்தகை மூலம் ரூ.5.69 கோடி வருவாய்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மதுரை;''மாவட்டத்தில் ஆறாண்டுகளில் மீன்வளத்துறை மூலம் 5.69 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது,'' என, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 40,634 எக்டேரில் கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள் உள்ளன. ஆனால் 25 சதவீத நீர்ப்பரப்பே அறிவியல் முறையான மீன் வளர்ப்புக்கு ...

தடகள வீரர்களுக்கு நிதி உதவி வழங்கல்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மதுரை;கனடா நாட்டில் நடக்கும் குள்ளமான மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தடகளப் போட்டியில் தமிழகத்தில் இருந்து மூன்று வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு துளிர் கல்வி அறக்கட்டளை சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.இவ்விழாவிற்கு அரசு மருத்துவமனை டீன் வைரமுத்துராஜா தலைமை வகித்தார். டாக்டர் ...

குறை தயங்குது தங்கம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மதுரை;மதுரையில் ஜூன் 21ல் 2,757 ரூபாய்க்கு விற்ற ஒரு கிராம் தங்கம், 22ல் 2,767 ரூபாயாக விலை கூடியது. ஜூன் 23ல் 2,772 ரூபாயாகவும், ஜூன் 26ல் 2,783 ரூபாயாகவும் மேலும் விலை கூடியது. நேற்று தங்கம் 2,764 ரூபாய்க்கு விற்றது, ஒரு கிராம் வெள்ளி 41.40 ரூபாயாக ...

குடிநீர் சப்ளை செய்யாமல் கட்டணம் மட்டும் வசூலிப்பதா:ஊராட்சி நிர்வாகங்கள் எதிர்ப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருமங்கலம்;குடிநீரே சப்ளை செய்யாமல் கட்டணம் மட்டும் பிடித்தம் செய்வதற்கு ஊராட்சி நிர்வாகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளும், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகளும் உள்ளன. மொத்தம் 400க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ...

மாற்றுத்திறனாளிகள் டாக்டராக வாய்ப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மேலுார்;மேலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ராவணன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினர் மதுரை ரக் ஷனா ஆட்டிசம் குழந்தைகள் நலமைய இயக்குனர் ராணி சக்கரவர்த்தி பேசியதாவது: மாற்றுத்திறனாளி மாணவர்கள் மருத்துவராக ...

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மதுரை;மதுரையில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர்.கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், செல்லுார் ராஜு, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், காமராஜ், அன்பழகன் மற்றும் ...

யோகி ராஜ்சந்திரா ஜெயந்தி விழா மதுரையில் காந்தியடிகள் நாடகம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மதுரை;காந்தியடிகளின் ஆன்மிக குரு யோகி ராஜ்சந்திரா 150வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் காந்தியடிகள் இந்தி நாடகம் நடந்தது.குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜெயின் துறவி யோகி ராஜ்சந்திரா. இவரை காந்தியடிகள் தனது ஆன்மிக குருவாக ஏற்று, அவர் வழியில் அகிம்சை, சத்தியாகிரகம், ...

மாணவர் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மதுரை;"மாணவர்களின் அனைத்து குறைபாடுகளும் விரைவில் நிவர்த்தி செய்யப்படும்," என பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.மதுரையில் ஜூன் 30ல் நடக்கும் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை காமராஜ் பல்கலை சார்பில் மாணவர் யோகா நிகழ்ச்சி கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது. ...

பக்தியை பகிர்ந்து கொள்வோம்: சுவாமி சிவயோகானந்தா

Wednesday June 28th, 2017 12:00:00 AM
மதுரை;மதுரை சொக்கிகுளம் ஸ்ரீகாஞ்சி காமகோடி சங்கர மடத்தில் பகவத்கீதை பத்தாவது அத்தியாயமான விபூதியோகம் குறித்து சின்மயா மிஷன் ஆச்சார்யா சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது:பகவான் ஒன்றே மாயையினால் பல்வேறு விதமாக காட்சியளிக்கிறார். அந்த பகவானாலேயே உலகத்தில் அனைத்தும் இயங்குகிறது. இவ்வாறு அறிந்து ...

பயிர் காப்பீட்டிற்காக தவமிருக்கும் விவசாயிகள்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கடலாடி;வரும் ஜூலை மூன்றாம் வாரத்திற்குள் விவசாயிகள் தங்களது நிலங்களில் விவசாய பணிகளை துவக்க உள்ள நிலையில், கடந்த 2016ம் ஆண்டில் போதிய பருவமழை இல்லாததால், விவசாயம் பொய்த்துப்போன நிலையில், பெருமளவு இழப்பீட்டினை சந்தித்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடுத்தொகை கிடைக்காமல் உள்ளது. கடலாடி ...

அவிநாசி அரசு கல்லூரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
அவிநாசி : அவிநாசி அரசு கல்லூரியில், மூன்றாம் கட்ட கலந்தாய்வு, நாளை நடைபெறவுள்ளது; முதல் இரண்டு கலந்தாய்வில் பங்கேற்க இயலாதவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளநிலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் மற்றும் ...

மதுக்கடைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருப்பூர் : திருப்பூர் ராயபுரத்தில், புதிய மதுக்கடைகள் அமைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.திருப்பூர் ராயபுரம் கல்லம்பாளையம் எம்.ஜி.ஆர்., நகர் செல்லும் ரோட்டில், "டாஸ்மாக்' மதுக்கடைகள் அமைப்பதற்கான பணிகள் ...

94 ஆயிரம் இடங்களுக்கு 13 ஆயிரம் பேர் போட்டி அரசு இன்ஜி., கல்லூரியில் வாய்ப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
காரைக்குடி;பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 536 இன்ஜி., கல்லுாரிகளிலிருந்து 94,518 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், 13,069 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ள 536 இன்ஜி., கல்லுாரிகளில் 20 சதவீத இடங்கள் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஒதுக்கப்படுகிறது. இதன்படி இதுவரை ...

ஸ்மார்ட் சிட்டி தேர்வுக்கு நன்றி

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருப்பூர் : திருப்பூரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்தமைக்கு, மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கவுரவ தலைவர் சக்திவேல், மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடுவுக்கு அனுப்பிய கடிதம்:திருப்பூருக்கு வருகை தந்த ஒவ்வொரு ...

மழைக்காக தவமிருக்கும் விவசாயிகள்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை, தென்மேற்கு பருவ மழை, இதுவரை வலுவடையாமல், ஓரிரு தூறல் மட்டுமே தலை காட்டி வருகிறது. மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.திருப்பூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை பொழிவு, 602.45 மி.மீ., ஆக உள்ளது. கடந்தாண்டு, பருவமழை பொய்த்து, 385.93 மி.மீ., ...

பணி முடியாமல் பயன்பாட்டுக்கு வந்த சுரங்கப்பாலம்! - எம்.எல்.ஏ., நடவடிக்கையால் சர்ச்சை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருப்பூர் : திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணக்கும் ரயில்வே சுரங்கப்பாலம் பணி நிறைவடைவதற்கு முன்பாகவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை புறக்கணித்து, தெற்கு எம்.எல்.ஏ., பாலத்தை திறந்து வைத்தது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.திருப்பூர் நகரை இரண்டாக பிரிக்கும் வகையில், ரயில்வே ...

உடையார் சேர்வை ஊரணி சீரமைப்பு வருவாய்த்துறை சார்பில் தத்தெடுப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
சிவகங்கை;சிவகங்கை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (விடியல் அணி) சார்பில் உடையார் சேர்வை ஊரணி தத்தெடுக்கப்பட்டு, அதிலிருந்த முட்செடிகள் அகற்றப்பட்டு தண்ணீர் வரும் கால்வாய்கள் சுத்தப்படுத்தப்பட்டன.சிவகங்கை நகரைச்சுற்றி 14 ஊரணிகள் உள்ளன. இவற்றில் செட்டியூரணி, வீரப்பன் சேர்வை ஊரணி, ...

சதுரங்கத்தில் அசத்திய மாணவ, மாணவியர்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருப்பூர் : திருப்பூர் வட்டார பள்ளிகள் அளவிலான சதுரங்க போட்டியில், மாணவ, மாணவியர் திறமையை வெளிப்படுத்தி, வெற்றி பெற்றனர்.பள்ளி கல்வித்துறையின் சார்பில், ஆண்டுதோறும் பல்வேறு குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வட்டார பள்ளி அளவிலான சதுரங்க போட்டிகள், ...

ஊர்தி ஓட்டுனர்கள் சங்க கூட்டம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
சிவகங்கை;தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் தயாளன், பொதுச் செயலாளர் தேவதாஸ், தணிக்கையாளர் இக்பால் முன்னிலை வகித்தனர். புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தேர்தல் ஆணையராக மாநில ...

நீங்களே இப்படி செய்யலாமா? குப்பை எரிக்கும் துப்புரவாளர்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருப்பூர் : குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய, மாநகராட்சி சுகாதார ஊழியர்களே, அவற்றை தீ வைத்து எரித்து திணறடிக்கின்றனர்.பொதுமக்களில் சிலர், குப்பை தொட்டி இல்லாத நிலையில், குப்பையை எரிக்கின்றனர். இதனால், சிறுவர்கள், முதியோர், வாகன ...

பாராட்டு விழா

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருப்பூர் : திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கத்தில், சங்க நிர்வாகிகள் பதவி நிறைவையோட்டி, பாராட்டு விழா நடைபெற்றது. சங்க தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். ரோட்டரி கூட்டங்களுக்கு அதிக வருகைப்பதிவு தந்தவர்களுக்கு, இவ்விழாவில் பரிசு ...

முன்னாள் மாணவர் சந்திப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருப்பூர் : திருப்பூர் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.கல்லூரி தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் கருப்பண்ணசாமி, பொருளாளர் கோவிந்தசாமி, இயக்குநர் முத்து அருண் முன்னிலை வகித்தனர். பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம், ...

ராமேஸ்வரம் கோயில் பாதுகாப்பு என்.எஸ்.ஜி., அதிகாரி ஆய்வு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு படை எஸ்.பி., ஆய்வு செய்து, அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார். ராமேஸ்வரம் கோயில் மற்றும் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதால், கோயில் சார்ந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி ...

குடிநீர் கேட்டு மறியல் சேவூர் அருகே பரபரப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
அவிநாசி : அவிநாசி, சேவூர் அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சேவூரை அடுத்த கிளாகுளம் பகுதியில், பல மாதங்களாக, குடிநீர் சப்ளை இல்லை. ஆழ்குழாய் கிணறுகளும் வற்றிய நிலையில், குடிநீர் கிடைக்காமல் அப்பகுதியினர் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.கிளாகுளம், தெற்கு சேவூர், ...

போதை ஒழிப்பு விழிப்புணர்வு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், திருப்பூரில் நேற்று நடைபெற்றது.தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளி அருகே நடந்த நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., பிரசன்னா ராமசாமி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பல்லடம் ரோடு வழியாக ...

பெண் தற்கொலை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
பல்லடம் : பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் தனுஷ்கோடி, 40; பனியன் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி, 38. இவர்களுக்கு, 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.குடும்ப பிரச்னையால் மன உளைச்சலடைந்த முத்துலட்சுமிக்கு, உடல் நலம் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின், சகோதரி ...

பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் திட்ட பணிகளில் தொய்வு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
பரமக்குடி; பரமக்குடியில் விரிவுபடுத்தப்பட்ட பஸ் ஸ்டாண்டில், பயணிகள் நிற்க இடமின்றியும், இலவச கழிப்பிடம் செயல்படாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் 50 ஆண்டுகளைக் கடந்து, கடந்த ஆண்டு ரூ. 68 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சியால் விரிவுபடுத்தப்பட்டது. இதன் படி பிளாட்பார ...

ரயில்வே பாலம் திறப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருப்பூர் : ரயில்வே ஸ்டேஷன் நடைபாதை நீட்டிப்பு பணிக்காக, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, சுரங்க பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்ததால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், முதல் நடைமேடையை மேற்குப்புறம் நீட்டிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக, ஸ்டேஷனை ஓட்டி ...

பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருப்பூர் : தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க, ஊத்துக்குளி தாலுகா பேரவை கூட்டம், செங்கப்பள்ளியில் நடந்தது. பள்ளத்தோட்ட சங்க இயக்குனர் சுப்ரமணி தலைமை வகித்தார். சேடர்பாளையம் சங்க இயக்குனர் பழனிசாமி வரவேற்றார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில தலைவர் முனுசாமி, பால் உற்பத்தியாளர் ...

குடிநீர் குழாய் பதிக்க மனு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருப்பூர் : பொங்குபாளையம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பெருமாநல்லூரில் இருந்து குழாய் பதிக்கும் பணியை துவக்க வேண்டும் என்று, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.மா. கம்யூ., பொங்குபாளையம் கிளை செயலாளர் அப்புசாமி, கலெக்டரிடம் கொடுத்த மனு:திருப்பூர் ஒன்றியம், ...

வாகன நிறுத்துமிடமாக மாறிய கோவில் வளாகம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருப்பூர் : கொங்கணகிரி கந்த பெருமான் கோவில் வளாகம், வாகனம் நிறுத்துமிடமாக மாறி வருவது, பக்தர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர், காலேஜ் ரோடு கொங்கணகிரியில், பிரசித்தி பெற்ற கந்த பெருமான் கோவில் உள்ளது. சிறு குன்று மீது அமைந்துள்ள இக்கோவிலுக்கு வந்து, ஏராளமான பக்தர்கள் சாமி ...

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தடுத்து நிறுத்த கோரிக்கை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
ராமநாதபுரம்;தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது , சிறை பிடிப்பதை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் கோரிக்கை விடுத்துள்ளது. ராமநாதபுரத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி ...

"ஜி.எஸ்.டி.,யால் பொருட்கள் விலை குறையும்'

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருப்பூர் : ""வரி விகிதங்களை மட்டும் கணக்கிட்டு, ஜி.எஸ். டி.,யால் பொருட்கள் விலை அதிகரிக்கும் என நினைப்பது தவறு; பொருட்களின் விலை நிச்சயம் குறையும்,'' என, ஆடிட்டர் கந்தசாமி பேசினார்.ஜி.எஸ்.டி., குறித்த கருத்தரங்கு, திருப்பூர் வேலாயுதசாமி மண்டபத்தில் நடந் தது. இதில், தென்னிந்திய பட்டைய ...

பல்லடத்தில் கடையடைப்பு போராட்டம் மக்களிடம் ஆதரவு திரட்ட முடிவு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
பல்லடம் : அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும், 4ல் பல்லடத்தில் நடக்கும் போராட்டம் தொடர்பாக, வீடு வீடாக சென்று ஆதரவு கோருவது என்று, அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பல்லடத்தில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 4ல், கடையடைப்பு ...

ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருப்பூர் : ஒப்பந்த ஊழியர்களுக்கு, மின் வாரிய அதிகாரிகள், தொடர் பணி வழங்காமல் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி, திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்கள் பெருமளவு பணியாற்றுகின் றனர். திருப்பூர் மாவட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் பணி செய்கின் றனர். இதில் ...

ரூ.550 கோடி ஸ்டேட் லெவிஸ் நிலுவை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறையினருக்கு வழங்க வேண்டிய, 550 கோடி ரூபாய், ஸ்டேட் லெவிஸ் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்று, ஏற்றுமதியாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.ஆடை ஏற்றுமதி துறை வளர்ச்சிக்காக மத்திய அரசு, ஏராளமான சலுகைகளை வழங்குகிறது. உற்பத்தி பொருளோடு வரி ...

பரமக்குடியில் மழை வேண்டி பிரார்த்தனை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
பரமக்குடி; பரமக்குடியில் மழை வேண்டி சிறுமிகள்,பொதுமக்கள் பெருமாள் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளை சுற்றி வந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 2 வருடங்களாக மழையின்றி நீர்நிலைகள் அனைத்தும் வற்றியுள்ளன. மேலும் நகரில் நீர்மட்டம்கடந்த வருடம் 70 அடியிலும், இரண்டு ...

ஜி.எஸ்.டி., கருத்தரங்கு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
பழநி;பழநியில் வணிகவரித்துறை சார்பில், ஜூன் 30ல் சரக்கு மற்றும் சேவைவரி (ஜி.எஸ்.டி.,) விளக்க கருத்தரங்கு நடக்க உள்ளது. மத்திய அரசு வருகிற ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி., வரியை நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளது. இதுதொடர்பாக பழநி வணிகவரித்துறை சார்பில் ஜூன் 30ல் அடிவாரம் அருணாச்சல திருமண மண்டபத்தில் ...

சென்னமநாயக்கன்பட்டி வடமதுரையில் கும்பாபிஷேகம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திண்டுக்கல்;திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டியில் காளியம்மன், கணபதி, மாரியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன், கருப்பண்ண சுவாமி கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பே பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். கும்பாபிஷேகத்திற்காக திருச்செந்துார், கும்பக்கரை, ...

வறட்சியால் விளைந்தமாணவர் மகசூல்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
ரெட்டியார் சத்திரம்; தமிழகத்தில் நிலவும் வறட்சியான சூழலால் கடந்த கல்வி ஆண்டை விட நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. மக்களின் தனியார் பள்ளி மோகத்தை கட்டுப்படுத்தி, அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் பல்வேறு ...

10 ஆயிரத்து 700 விவசாயிகளுக்கு 9 ஆயிரம் லோடு வண்டல் மண்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திண்டுக்கல்;'திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணியில், 9 ஆயிரம் டிராக்டர் லோடு வண்டல் மண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக' கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் நடவடிக்கை ...

வறட்சியால் காய்ந்த முருங்கை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
ஒட்டன்சத்திரம்;விலை இருந்தும், ஒட்டன்சத்திரம் பகுதியில் வறட்சி காரணமாக முருங்கை செடிகள் காய்ந்து போனதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், மார்க்கம்பட்டி, அம்பிளிக்கை பகுதிகளில் முருங்கை மரங்கள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தொடர்ச்சியாக ...

'செட்-டாப் பாக்ஸ்' ஒரு மாதம் அவகாசம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
தமிழகத்தில், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில், கேபிள், 'டிவி' ஒளிபரப்பை துவங்குவதற்கு, அரசு கேபிள் நிறுவனத்திற்கு அளித்திருந்த காலக்கெடுவை, மத்திய அரசு, மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளது. தமிழகத்தில், 'செட் - டாப் பாக்ஸ்' மூலம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், கேபிள், 'டிவி' சேவையை, அரசு ...

விருதுநகர் வந்தது' ரம்ட்டான்' கிலோ ரூ.200க்கு விற்பனை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
விருதுநகர்;குற்றால சீசனின்போது மட்டும் கிடைக்கும் ரம்ட்டான் பழம், விருதுநகரில் விற்பனைக்கு வந்துள்ளது.இனிப்பு, புளிப்பு சுவை உள்ள ரம்ட்டான்பழம், சிவப்பு, பச்சை கலந்து வெளியில் முள்போல் வட்டமாக இருக்கும். இதை உடைத்தால் உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பகுதியை சாப்பிடலாம். உடலுக்கு குளிர்ச்சி ...

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
ஸ்ரீவில்லிபுத்துார்; பள்ளி மாணவர்களுக்கு 'சிடி'க்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு வகுப்புகளை ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி சுகாதாரத்துறை நடத்தி வருகிறது. மழைக்காலம் துவங்கியுள்ளதால் ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியில் டெங்கு பாதிப்பு ஏற்படலாம் எனக்கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகராட்சி ...

விசைத்தறி தொழிலாளர்சங்கத்தினர் ஊர்வலம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
அருப்புக்கோட்டை,;ஜி.எஸ்.டி., வரி சட்டத்தை கண்டித்து 3 நாட்களுக்கு அனைத்து விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் விசை தறி சார்ந்த தொழில்கள் வேலை நிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதை வலியுறுத்தி தொழிலாளர்கள் மற்றும் சங்கத்தினர் பாவடி தோப்பிலிருந்து ஊர்வலமாக சென்று ...

செயற்குழு கூட்டம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
விருதுநகர்;விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணை தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாத்திமாமேரி அறிக்கையை சமர்ப்பித்தார். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்ற தீர்மானம் ...

குடிநீர் பிரச்னைய தீர்க்க 'போர்வெல்' அமைக்க முடிவு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
தேவதானப்பட்டி:சில்வார்பட்டியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய 'போர்வெல்' அமைப்பதற்கான முயற்சியில் ஒன்றிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.பெரியகுளம் ஒன்றியம் நல்லகருப்பன்பட்டி, தர்மலிங்கபுரம், நாகம்பட்டி, கதிரப்பன்பட்டி உள்ளிட்டவை சில்வார்பட்டி ஊராட்சியின் உட்கடை கிராமங்களாக ...

செயல்படாத போலீஸ் ஸ்டேஷன் 'ஷெட்' கைதிகள் தப்பிச்செல்ல வாய்ப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
பெரியகுளம்;பெரியகுளம் கிளைச் சிறையின் பின்புறம் சுவரை ஒட்டி கட்டப்பட்டுள்ள கட்டடத்தால், கைதிகள் எளிதில் தப்பிச் செல்லும் அபாயம் உள்ளது. 'மைனா' படத்தில், கதாநாயகன் விதார்த் பெரியகுளம் கிளைச்சிறையில் இருந்து சுவர் ஏறி தப்பி செல்வது போல் காட்சி இடம் பெற்றிருக்கும். இதே போல் உண்மையிலே கைதி ...

போலீசாருக்கு எஸ்.பி.,பாராட்டு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
தேனி;சென்னையில் நடந்த போலீசாருக்கான நுண்ணறிவு பிரிவு போட்டிகளில் வென்றவர்களை எஸ்.பி., பாஸ்கரன் கவுரவித்தார். சென்னை ஊனமாஞ்சேரி, ஆவடியில் மாநில அளவிலான போலீஸ் அதிகாரிகளுக்கான நுண்ணறிவு, குற்றப்புலனாய்வு போட்டிகள் நடந்தன. ஜூன் 19 முதல் 23 வரை நடந்த போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல்வேறு ...

சபரிமலையில் இன்று கொடியேற்றுஇருமுடி கட்டுடன் வந்தது யானை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
சபரிமலை: சபரிமலையில் ஆராட்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா நாட்களில் ஐயப்பன் விக்ரகத்தை சுமக்கும் யானை இருமுடி கட்டுடன் நேற்று சன்னிதானம் வந்தது. சபரிமலையில் 10 நாள் திருவிழா பங்குனி மாதம் நடைபெறும். இந்த ஆண்டு புதிய கொடிமரத்துக்கான பணிகள் நடைபெற்று ...

தென்மேற்கு பருவமழை கனஜோர்:அணைகள் நிரம்புது: அருவிகளில் வெள்ளம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருநெல்வேலி;தென்மேற்குபருவமழை கன ஜோராக பெய்துவருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது.திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்குபருவமழை தாமதமாக தற்போது களைகட்டத்துவங்கியுள்ளது.நேற்றுமுன்தினம் இரவில் பெய்த ...

நெல்லையப்பர் தேரோட்ட விழா:தேர்கள் தூய்மைப்பணி துவக்கம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருநெல்வேலி;நெல்லையப்பர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா, தேரோட்டத்திற்கான பணிகள் துவங்கியுள்ளன.திருநெல்வேலியில் நடுநாயகமாக அருள்பாலிக்கும் நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில்ஆண்டுதோறும் நடக்கும் ஆனிப்பெருந்திருவிழா பிரசித்திபெற்றதாகும். தமிழகத்தின்மிகப்பெரிய தேர்களில் ஒன்றான ...

கூடங்குளம் இரண்டு அணுஉலைகளும் அவுட்:இயங்குகிறதா.. இல்லையா மவுனமே பதில்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
திருநெல்வேலி:கூடங்குளத்தில் முதலாவது அணு

வாடிக்கையாளர் கேள்விக்கு ரோபோக்கள் பதிலளிக்கும்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கோவை : 'வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை ரோபோக்கள் நிவர்த்திசெய்யும்' என்று வங்கி மேலாளர் கூறினார்.சிட்டியூனியன் வங்கி சுந்தராபுரம் கிளையின், 2ம் ஆண்டு விழா மற்றும் வாடிக்கையாளர் சேவை தின விழா நேற்று வங்கி வளாகத்தில் நடந்தது.வங்கி மேலாளர் ஸ்ரீதர் ...


பயங்கரவாதத்தை பரப்பும் பாக்.,கிற்கு மோடி - டிரம்ப் எச்சரிக்கை...!

Wednesday June 28th, 2017 12:00:00 AM
வாஷிங்டன்: 'பயங்கரவாதிகள், பாகிஸ்தானை, புகலிடமாக பயன்படுத்துவதை, அந்நாடு அனுமதிக்க கூடாது. ஐ.எஸ்., லஷ்கர் - இ - தெய்பா, ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் நேற்று, கூட்டாக பாகிஸ்தானை வலியுறுத்தினர்.அமெரிக்காவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை நேற்று முன்தினம் இரவு, சந்தித்து பேசினார்.அதிபரின் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின்போது, மும்பை மற்றும் ...

வெள்ளை இன குழந்தையை தத்தெடுக்க இந்திய வம்சாவளி தம்பதிக்கு அனுமதி மறுப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி சீக்கிய தம்பதி, பிரிட்டன் அல்லது ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த, குழந்தையை தத்தெடுக்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பெர்க் ஷிரில் வசிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய தம்பதி, சந்தீப், ரீனா ஆகியோர், குழந்தையை தத்தெடுக்க திட்டமிட்டனர். இவர்கள் இருவருக்கும், தற்போது, 30 வயதாகிற நிலையில், ஏழு ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும், குழந்தை பிறக்காததால், இந்தமுடிவுக்கு வந்தனர்.இதையடுத்து, அங்குள்ள காப்பகத்திற்கு சென்று, குழந்தையை ...

பக்கிங்ஹாம் அரண்மனை பாதுகாப்பு தலைவராக கனடா பெண் நியமனம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
லண்டன்: பிரிட்டனின் பக்கிங்ஹாம் அரண்மனை பாதுகாப்பு படைக்கு, முதன்முறையாக, கனடாவைச் சேர்ந்த பெண், தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வசிக்கும், பக்கிங்ஹாம் அரண்மனையின் பாதுகாப்பு படையில், இதுவரை ஆண்கள் மட்டுமே தலைமையேற்று வந்து உள்ளனர்.அந்நாட்டு ராணுவத்தில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு, ஜூலையில் இந்த தடை நீக்கப்பட்டது. அதன்பின், ராணியின் பாதுகாப்புக்கு, கனடா நாட்டு ராணுவ பெண் கேப்டனான, மெகன் கவுட்டோ, 24, தலைமையிலான, படைப் பிரிவு தற்காலிகமாக அமைக்கப்பட்டது.ஜூலை, 3ல், மெகன், அரண்மனை பாதுகாப்பு ...

சீனாவில் நேற்று மீண்டும் நிலச்சரிவு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
பீஜிங்: சீனாவில் நேற்று மீண்டும் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.அண்டை நாடான சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், 61 வீடுகள் மண்ணில் புதையுண்டன. மண்ணில் புதைந்து, சிலர் பலியாகினர்; அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி, மண்ணில் புதைந்த, 93 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், சிச்சுவான் மாகாணத்தில், நேற்று மீண்டும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப் பகுதியிலிருந்து ஏற்பட்ட ...

ரசாயன ஆயுதம் பயன்படுத்துவதா? : சிரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Wednesday June 28th, 2017 12:00:00 AM
வாஷிங்டன்: 'போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, ரசாயன ஆயுதத்தை பயன்படுத்த, சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் திட்டமிட்டு உள்ளார்; அவ்வாறு பயன்படுத்தினால், அதற்கான விலையை அவர் கொடுக்க நேரிடும்' என, அமெரிக்கா எச்சரித்துள்ளது.3.20 லட்சம் பேர் : மேற்கு ஆசிய நாடான, சிரியாவின் அதிபராக, பஷார் அல் ஆசாத் உள்ளார். அரசுக்கு எதிராக, கிளர்ச்சியாளர்கள், 2011 மார்ச் முதல் போராடி வருகின்றனர். இதுவரை நடந்துள்ள பல்வேறு மோதல்களில், 3.20 லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது; அதே நேரத்தில், அதிபர் ஆசாத் ...

அமெரிக்க படை தாக்குதல் : சிரியாவில் 57 பேர் பலி

Wednesday June 28th, 2017 12:00:00 AM
பெய்ரூட்: சிரியாவில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிறை மீது, அமெரிக்க கூட்டணிபடையினர் நடத்திய குண்டு வீச்சில், 57 பேர் கொல்லப்பட்டனர்.மேற்காசிய நாடான, சிரியாவின் பெரும்பகுதி, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் மீது, அமெரிக்க கூட்டணி படையும், ரஷ்யா தலைமையில், சிரியா அரசு படைகளும், தனித்தனியே தாக்குதல் நடத்தி வருகின்றன. இங்கு, மே மாதம், ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், அல் மைதின் பகுதியில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிறை மீது, அமெரிக்க கூட்டணி படைகள், ...

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது : கூட்டறிக்கையில் டொனால்டு டிரம்ப் பாராட்டு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும், சந்தித்து பேசிய பின் கூட்டறிக்கை ெவளியிடப்பட்டது. அதில் டிரம்ப் கூறியுள்ளதாவது:இந்தியாவின் வளமையான கலாசாரம் என்னை ஈர்க்கிறது. 70வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியாவிற்கு என் வாழ்த்துக்கள். 'இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டு இருப்பேன்' என, அதிபர் தேர்தலின் போது, பிரசாரம் செய்தேன்; நான் சொன்னபடியே நடந்துள்ளது.இந்திய பொருளாதாரம், வேகமாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி, ஏராளமான சாதனைகளை செய்துள்ளார். அந்நாட்டில், விரைவில், ஜி.எஸ்.டி., வரி அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம், ...

நெதர்லாந்திலிருந்து இந்தியா கிளம்பினார் பிரதமர் மோடி

Wednesday June 28th, 2017 12:00:00 AM
தி ஹேக்: போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நெதர்லாந்திலிருந்து இந்தியா புறப்பட்டார். ...

ஹிட்லரின் அவதாரம் டிரம்ப் : வடகொரியா விமர்சனம்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
சியோல்: ஹிட்லரின் அவதாரமாக டிரம்ப் உள்ளதாக என வடகொரியா விமர்சனம் செய்து உள்ளது.கடுமையான பொருளாதார நெருக்கடி உலக நாடுகளின் எதிர்ப்பு என இக்கட்டான நிலையிலும், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.தென் கொரியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டு வருகிறது. தென் கொரியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தும் வடகொரியா கண்டு கொள்ளவில்லை. வடகொரியாவால் கைது செய்யப்பட்ட அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியர் 18 மாதங்களுக்கு பின் விடுவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் கோமா ...

மீண்டும் 'வான்னாகிரை' வைரஸ் : ஐரோப்பிய நாடுகள் பாதிப்பு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
கீவ்: உலகை அச்சுறுத்திய 'வான்னாகிரை' கம்ப்யூட்டர் வைரஸ் போல, மீண்டும் ஐரோப்பிய நாடுகளை தாக்கியுள்ளது. கடந்த மே மாதம் கம்ப்யூட்டர் உலகத்தை 'ரான்சம்வேர்' என்ற வைரஸ் அச்சுறுத்தியது. 'வான்னாக்ரை'(அழ விருப்பமா) என்ற பெயரில் 'ஹேக்கர்'கள் வைரசை பரப்பினர். இதனால், 150 நாடுகளில் 'விண்டோஸ் எக்ஸ்.பி' இயங்குதளத்தில் செயல்படும் 2,30,000 கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன. 'ரான்சம்வேர்' வைரஸ் என்பது நம்மிடம் பணத்தையோ பிற தகவல்களையோ பறிப்பதற்காக உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் நச்சு நிரல். இந்த வைரஸ் கணினியை தாக்கினால், அதில் உள்ள முக்கியமான டேட்டாக்கள் அனைத்தும் முடக்கப்படும். ...

குற்றவாளிகளின் சொர்க்கபுரி லண்டன்! : இந்திய தூதர் குற்றச்சாட்டு

Wednesday June 28th, 2017 12:00:00 AM
லண்டன்: ''குற்றங்கள் செய்து விட்டு தப்பியோடுபவர்களுக்கு சொர்க்கபுரியாக, பிரிட்டன் மாறி விட்டது,'' என, பிரிட்டனுக்கான இந்திய துாதர், ஒய்.கே.சின்ஹா கூறியுள்ளார். வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய, மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரிட்டனில் பதுங்கி உள்ளான். அவனை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில், மத்திய அரசும், புலனாய்வு அமைப்புகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பிரிட்டனுக்கான இந்தியத் துாதர், ஒய்.கே.சின்ஹா கூறியதாவது: குற்றங்கள் செய்து விட்டு, நீதியின் ...

இந்தியாவுக்கு 22 ட்ரோன்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

Wednesday June 28th, 2017 12:00:00 AM
வாஷிங்டன்: இந்தியாவுக்கு 22 கார்டியன் ட்ரோன் வகை ஆளில்லா உளவு விமானங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.ஒப்பந்தம்:பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன. இதில், இந்திய கடலோர மற்றும் நிலப்பரப்பு எல்லைகளைக் கண்காணிக்க, 22 கார்டியன் ட்ரோன் வகை ஆளில்லா உளவு விமானங்களை வாங்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து இருபத்து எட்டாயிரம் கோடி ரூபாய்(2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்பது ...

‛வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் சிறப்பு': மோடி

Wednesday June 28th, 2017 12:00:00 AM
தி ஹேக்: வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு என நெதர்லாந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.3 நாடுகள் பயணத்தின் ஒருபகுதியாக நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு நெதர்லாந்து வாழ் இந்திய மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.நல்லாட்சி:இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இங்குள்ள பலர் ஓ.சி.ஐ., கார்டு இல்லாமல் உள்ளனர். 10 சதவீத பேர் மட்டுமே வைத்துள்ளனர். இந்தியாவில் இருந்து இங்கு புலம்பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் ஓ.சி.ஐ., ...


இதே நாளில் அன்று

Tuesday June 27th, 2017 01:41:00 PM
1921 ஜூன் 28பி.வி.நரசிம்ம ராவ், ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டம், லக்னேபல்லி என்ற கிராமத்தில், கங்காராவ் - ருக்மணி அம்மாள் தம்பதிக்கு மகனாக, ௧௯௨௧ ஜூன், ௨௮ல் பிறந்தார். சட்டப் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்ற அவர், ஆங்கிலம் உள்ளிட்ட எட்டு அன்னிய மொழிகளை கற்று தேர்ந்தவர். சுதந்திர போராட்ட தியாகியான ...

ஜாதி அடிப்படையில் விவாதம் ஏன்? ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் வருத்தம்

Tuesday June 27th, 2017 04:21:00 PM
ஜனாதிபதி தேர்தலில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார், ''ஜனாதிபதி வேட்பாளரை, அவரது தகுதி அடிப்படையில் பார்க்காமல், சமூகம் அடிப்படையில் விவாதிப்பது கவலை அளிக்கிறது,'' என, தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தல், ஜூலை 17ல் ...

100 நாள் ஆட்சி: யோகி பெருமிதம்

Tuesday June 27th, 2017 06:48:00 PM
லக்னோ : உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத், ஆட்சி பொறுப்பேற்று, 100 நாட்கள் ஆகும் நிலையில், தன் அரசின் சாதனை பட்டியலை நேற்று வெளியிட்டார். உத்தர பிரதேசத்தில், மார்ச் மாதம் நடந்த சட்ட சபை தேர்தலில், 403 தொகுதிகளில், 325 இடங்களில், பா.ஜ., வெற்றி பெற்றது. மார்ச் 19ல், யோகி ஆதித்யநாத் முதல்வராக ...

ஹோமம் செய்து பதவியேற்ற மேயர்

Tuesday June 27th, 2017 06:49:00 PM
ஷிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தின் ஷிம்லா மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர், மந்திரங்கள் ஓதி, ஹோமம் செய்து, பதவியேற்றனர். ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஷிம்லா மாநகராட்சிக்கு, சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த, ...

அரசியலாக்க கூடாது!

Tuesday June 27th, 2017 06:52:00 PM
பார்லிமென்ட்டில் நடக்கவுள்ள, ஜி.எஸ்.டி., துவக்க விழாவில் பங்கேற்க, அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய முடிவு இது. காங்., இந்த கூட்டத்தை புறக்கணித்து, அரசியலாக்க கூடாது.அருண் ஜெட்லி, மத்திய நிதியமைச்சர், ...

மத ஒற்றுமை பெயரில் பாத யாத்திரை : காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டம்

Tuesday June 27th, 2017 07:20:00 PM
பெங்களூரு: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பாத யாத்திரை நடத்துவதில், காங்கிரஸ் கட்சியினருக்கு திடீரென்று ஆர்வம் வந்துள்ளது. மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி காலத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா, சட்டவிரோத சுரங்கத்தொழிலுக்கு எதிராக, 2013ல் பெங்களூரிலிருந்து பல்லாரி ...

தனியார் பால் பவுடரில் 'காஸ்டிக் சோடா' கலப்படம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் புகார்

Tuesday June 27th, 2017 04:53:00 PM
சென்னை: ''தனியார் பால் பவுடரில், 'காஸ்டிக் சோடா' கலந்திருப்பது, பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. பாலில் கலப்படம் உள்ளதாக கூறியதால், எனக்கு மிரட்டல்கள் வருகின்றன,'' என, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.அவர் அளித்த பேட்டி: 'நெஸ்ட்லே டுடே, ரிலையன்ஸ்' நிறுவனங்களின் பால் ...

எம்.பி.,க்கள் எதிர்ப்பு கொடி; சசிகலா குடும்பம் கடும் அதிர்ச்சி

Tuesday June 27th, 2017 05:18:00 PM
ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, 'சசிகலா மற்றும் முதல்வர் ஒப்புதலுடன், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது' என, கூறியிருந்தார். அதற்கு, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அரி, அருண்மொழிதேவன், எம்.எல்.ஏ., முருகுமாறன் ...

பொது செயலர் பதவி காலி : செம்மலை திட்டவட்டம்

Tuesday June 27th, 2017 05:30:00 PM
சேலம்: ''அ.தி.மு.க.,வில், பொதுச் செயலர் பதவி காலியாக தான் உள்ளது,'' என, மேட்டூர், எம்.எல்.ஏ., செம்மலை தெரிவித்தார்.சேலத்தில், தி.மு.க., வைச் சேர்ந்த சில நிர்வாகிகள், மேட்டூர், எம்.எல்.ஏ., செம்மலை முன்னிலையில், அ.தி.மு.க., பன்னீர் அணியில் இணைந்தனர். பின், செம்மலை கூறியதாவது:முதல்வர் பழனிசாமி அணியினர், ...

சட்டசபையில் இன்று...

Tuesday June 27th, 2017 05:32:00 PM
மூன்று நாள் விடுமுறைக்கு பின், தமிழக சட்டசபை கூட்டம், இன்று துவங்குகிறது. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். முதல்வர் பழனிசாமி பதிலளித்து, முக்கிய அறிவிப்புகளை ...

அமைச்சர்கள் இன்று அவசர ஆலோசனை

Tuesday June 27th, 2017 05:32:00 PM
எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா குறித்து முடிவு செய்ய, அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம், இன்று நடக்கிறது. இந்த ஆண்டு முழுவதும், மாவட்டந்தோறும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை கொண்டாட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் துவக்க விழா, ஜூன், 30ல், மதுரையில் நடைபெற உள்ளது. முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ...

நதிநீர் இணைப்பு திட்டம் : ஸ்டாலின் கடிதம்

Tuesday June 27th, 2017 05:37:00 PM
சென்னை: 'நதி நீர் இணைப்பு திட்டங்களில், உடனடி கவனம் செலுத்த வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அவரின் கடிதம் விபரம்: மாநிலங்களுக்கு இடையேயான, நதி நீர் இணைப்பு பிரச்னைகளால், தமிழகம் இன்றைக்கு, மிக மோசமான சூழலை அனுபவித்து வருகிறது. தமிழக விவசாயிகள், ...

ஆளாளுக்கு அறிக்கை விடுவதால் அ.தி.மு.க.,வினர் பெரும் குழப்பம்

Tuesday June 27th, 2017 05:41:00 PM
அ.தி.மு.க.,வில், பல தலைமை உருவாகி உள்ளதால், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கட்டுப்பாடின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடத் துவங்கி உள்ளனர். அதனால், கட்சியினர் மத்தியில் குழப்பம் அதிகரித்து வருகிறது.அ.தி.மு.க.,வில், பன்னீர் அணி, பழனிசாமி அணி, தினகரன் அணி என, மூன்று அணிகள் உருவாகி உள்ளன. @subtitle@சசி பற்றி ...

மாவட்ட தலைவர் நியமனம் : திருநாவுக்கரசரிடம் விசாரணை

Tuesday June 27th, 2017 05:43:00 PM
தமிழக காங்கிரசுக்கு, புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்களில், குற்றப் பின்னணி உள்ளவர்களும் இடம் பெற்று உள்ளதாக புகார் எழுந்து உள்ளது. இது தொடர்பாக,திருநாவுக்கரசரிடம், டில்லி மேலிடம் விசாரணை நடத்தி உள்ளது. இது குறித்து, தமிழக காங்., வட்டாரங்கள் கூறியதாவது: புதிதாக நியமிக்கப்பட்ட, 72 மாவட்ட ...

'பா.ஜ., பிரமுகர் மீது தாக்குதல் தொழில் முன்விரோதமே காரணம்'

Tuesday June 27th, 2017 06:01:00 PM
ராமநாதபுரம்: ''ராமநாதபுரத்தில், பா.ஜ., நகரச் செயலர் அஷ்வின்குமார் தாக்கப்பட்டதற்கு, தொழில் முன்விரோதம் தான் காரணம்,'' என, எஸ்.பி., ஓம் பிரகாஷ்மீனா தெரிவித்தார்.ராமநாதபுரத்தில், சில நாட்களுக்கு முன், பா.ஜ., நகரச் செயலர் அஷ்வின்குமாரை தாக்க காரில் வந்தவர்கள், அவரது தந்தை மலைமேகத்தை தாக்கினர். ...

மதுரை குடிநீருக்கு முல்லை பெரியாறு தண்ணீர்:விழாவில் அறிவிப்பாரா முதல்வர்

Tuesday June 27th, 2017 07:48:00 PM
மதுரை;மதுரையின் தாகம் தீர்க்கும் வைகை அணை வறண்டிருக்கும் நிலையில், முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பான அறிவிப்பை, மதுரையில் ஜூன் 30ம் தேதி எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவிக்க வேண்டும் என, மக்கள் ...

'அமைச்சர் ராஜு என் ஹீரோ': நடிகை கஸ்தூரி கிண்டல்

Tuesday June 27th, 2017 08:30:00 PM
'தெர்மாகோல் புகழ் அமைச்சரே, என் விருப்பமான சூப்பர் ஹீரோ' என, நடிகை கஸ்துாரி குறிப்பிட்டுள்ளார்.ரஜினி, பிரபு, விஜய்காந்த் என, 1990ல், பிசியாக வலம் வந்தவர் நடிகை கஸ்துாரி. திருமணமாகி வெளிநாடு சென்றவர், மீண்டும் இந்தியா திரும்பி வந்து, சில படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாய்ப்பு ...

வண்டல் மண் வழங்கலில் அரங்கேறிய அரசியல்

Tuesday June 27th, 2017 08:38:00 PM
கன்னிவாடி;ஆத்துார் தொகுதியில் வண்டல் மண் வழங்கல் துவக்க விழாவை, அ.தி.மு.க., தி.மு.க., சார்பில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடத்தினர்.நீர்நிலைகளை ஆழப்படுத்த ஏதுவாக, கண்மாய், குளங்களில் இருந்து வண்டல்மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளித்து வருகின்றனர். வழக்கம்போல, பெரும்பான்மையான பகுதிகளில் ...